385 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

385 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, மார்ச் 04,2016,

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி, அறுவை சிகிச்சை அரங்கம், அல்ட்ரா சோனோகிராம், இசிஜி ஊடுகதிர் இயந்திரம், செமி ஆட்டோ அனலைசர் உள்ளிட்ட நவீன மருத்துவக் கருவிகளுடன் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இவற்றில் 5 மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 129 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், 371 ஊராட்சி ஒன்றியங்களில் 405 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், திண்டுக்கல் நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் கூடுதலாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என 15 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன என்ற நிலை ஏற்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.