4 தொகுதி தேர்தல்,அதிமுகவில் 24 பொறுப்பாளர்கள் நியமனம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

4 தொகுதி தேர்தல்,அதிமுகவில் 24 பொறுப்பாளர்கள் நியமனம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , அக்டோபர் 27,2016,

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிபொதுத்தேர்தலுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியிலும், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட தலைமைக்கழக செய்திக்குறிப்பு வருமாறு:-

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு (புதுச்சேரி மாநிலம்) ஆகிய சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் 19.11.2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு,  அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி :
1. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி 2. அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், மின்துறை அமைச்சருமான தங்கமணி 3. அ.தி.மு.க சிறுபான்மமையினர் பிரிவுச்செயலாளர் அன்வர்ராஜா, எம்.பி. 4. சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பணன் 5. கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி:
1. அ.தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. 2. அ.தி.மு.க  அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி. 3. திருவாரூர் மாவட்ட  செயலாளரும், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான காமராஜ். 4. கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன். 5. திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன். 6. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். 7. வேளாண்மைத் துறை அமைச்சர் சு.துரைக்கண்ணு. 8.கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன். 9.அ.தி.மு.க இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் ப.குமார் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி:
1.நிதியமைச்சரும் அ.தி.மு.க பொருளாளருமான ஒ.பன்னீர்செல்வம் 2.வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன். 3. மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க  செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ. 4. வருவாய்த்துறை அமைச்சரும், அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி. உதயகுமார். 5. விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் திருப்பரங்குன்றம் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லித்தோப்பு தொகுதி (புதுவை):
1.புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், 2.கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்.3. அ.தி.மு.க அமைப்பு செயலாளர் செ. செம்மலை, எம்.எல்.ஏ. 4.அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சொரத்தூர் இரா. ராஜேந்திரன். 5. புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் பெ.புருஷோத்தமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெற உள்ள சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.