45 லட்சம் ரூபாய் செலவில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் : முதல்வர் ஜெயலலிதா

45 லட்சம் ரூபாய் செலவில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் : முதல்வர் ஜெயலலிதா

செவ்வாய், செப்டம்பர் 20,2016,

சென்னை, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ரூ.45 லட்சம் மதிப்பீ்டடில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:-

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, மேட்டுத்திடல், சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆஸ்ரமத்திற்கு 3,634 சதுர அடி பரப்பளவில் கூடுதல் வகுப்பறைகள் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுவதற்கும், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, அருள்மிகு பெரியநாயகியம்மன் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய அறிவியல் ஆய்வகக் கட்டிடம், வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுவதற்கும், திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியின் மேம்பாட்டு பணிகளை 45 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

திருநெல்வேலி மாவட்டம், பண்பொழி, அருள்மிகு ஸ்ரீ திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் வசதிக்கென 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் ஓய்வுக்கூடம்  ஆகியவை கட்டப்படும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.