500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சரத்குமார் பாராட்டு

500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு  சரத்குமார் பாராட்டு

திங்கள் , ஜூன் 20,2016,

சென்னை: பூரண மது விலக்கு இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி வருவதாக கூறியுள்ள சரத்குமார் 30 நாட்களுக்குள் 500 மதுக்கடைகளை மூடிய முதல்வர் ஜெயலலிதா  நடவடிக்கைக்கு  பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அகில  இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் சரத்குமார் அறிக்கை வருமாறு: கடந்த மே 24 ஆம் தேதி முதலமைச்சர் பதவி ஏற்றவுடன்  டாஸ்மாக் கடைகளின் பணி நேரத்தை குறைத்து உத்தரவிட்ட முதலமைச்சர் அடுத்த கட்ட நடவடிக்கையாக 500 கடைகளை மூடுவதற்கு  உத்தரவிட்டுள்ளார்.
 
முதல்வரின் படிப்படியான பூரண மது விலக்கு அறிவிப்பை வெறும் கண்துடைப்பு என்று தேர்தல் நேரத்தில் போட்டிப் போட்டுக் கொண்டுபிரச்சாரம் செய்த எதிர் கட்சிகள், 30 நாட்களுக்குள் தமிழகம் முழுவதிலும் உள்ள கடைகளில் 500 கடைகளை தேர்ந்தெடுத்து அவற்றைமூடுவதற்கு உத்தரவு பிறப்பித்து அதனை உடனடியாக அமுலுக்கு கொண்டுவந்திருக்கும் முதல்வரின் இந்த செயலை பாராட்ட வேண்டும். உடனடி சான்றிதழ்கள் மூலம் கடைகள் மூடப்படுவது  ஊர்ஜிதப்படுத்தப் படுத்தப்படுவதும்  அங்கு பணி புரிந்தவர்களுக்கு மாற்று பணிக்கானநடவடிக்கைள் எடுப்பதும்  பாராட்டுக்குரியது
 
இந்த துரித செயல்பாடுகள் முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் பேசியது போல முதல்வர்  சொன்னதையும் செய்வார், சொல்லாததையும்செய்வார் என்ற பெரும் நம்பிக்கையை மக்களுக்கு தரும். மக்கள் நலன்  குறித்த அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மது விலக்கைதமிழகத்தில் நிறைவேற்ற எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்  இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.