500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

திங்கள் , ஜூன் 20,2016,

நாகர்கோவில்; தமிழகத்தில் 500 டாஸ் மாக் மதுக்கடைகளை மூட முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார். 
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு, நடவடிக்கை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம். பாராட்டுதற்குரியது. அதே நேரத்தில் பூரண மதுவிலக்கை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும். மதுக்கடைகளை மூடுவதுடன் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாவட்டம்தோறும் அரசு சார்பில் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.