500 மதுபான கடைகளை மூடுவதற்கும்,பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கவும் உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், இல்லத்தரசிகள், பொதுமக்கள் பாராட்டு

500 மதுபான கடைகளை  மூடுவதற்கும்,பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கவும் உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், இல்லத்தரசிகள், பொதுமக்கள் பாராட்டு

ஞாயிறு, ஜூன் 19,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, 500 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டன. மூடிய கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உடனடியாக மாற்று பணியிடங்கள் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று, 6-வது முறையாக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, பதவியேற்ற அன்றே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பயிர்கடன் ரத்து, 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், டாஸ்மாக் கடைகளை மூடுவது உள்ளிட்ட 5 உத்தரவுக்கான அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். பூரண மதுவிலக்கை ஏய்தும் நோக்கில், கடந்த மாதம் 24-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை குறைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி, 500 சில்லறை மதுபான விற்பனை கடைகளை மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மூடப்படும் கடைகள் மாவட்ட வாரியாக அடையாளம் காணப்பட்டு, அதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில், வடசென்னை-2, மத்திய சென்னை-3, தென் சென்னை-3, காஞ்சிபுரம் வடக்கு-13, காஞ்சிபுரம் தெற்கு-3, திருவள்ளூர் மேற்கு-19 என மொத்தம் 58 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது – கோயம்புத்தூர் மண்டலத்தில், கோயம்புத்தூர் வடக்கு-1, கோயம்புத்தூர் தெற்கு-4, திருப்பூர்-8, ஈரோடு-16, நீலகிரி-31, என மொத்தம் 60 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது – மதுரை மண்டலத்தில், மதுரை தெற்கு-21, மதுரை வடக்கு-16, திண்டுக்கல் – 10, ராமநாதபுரம்-36, விருதுநகர்-27, சிவகங்கை-43, திருநெல்வேலி-9, தூத்துக்குடி-30, கன்னியாகுமரி-6, தேனி-3 என மொத்தம் 201 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது – திருச்சி மண்டலத்தில் திருச்சி -14, நாகை-16, தஞ்சை-16, புதுக்கோட்டை-14, கடலூர்-15, கரூர்-14, திருவாரூர்-8, விழுப்புரம்-29, பெரம்பலூர்-7 என மொத்தம் 133 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது – சேலம் மண்டலத்தில், தருமபுரி-1, கிருஷ்ணகிரி-6, நாமக்கல்-11, வேலூர்-8, திருவண்ணாமலை-18, அரக்கோணம்-6 என மொத்தம் 48 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட இந்த 500 கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் உள்ள ஊழியர்களை, மற்ற பகுதி டாஸ்மாக் காலியிடங்களில் பணிமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

500 மதுபான கடைகளை  மூடுவதற்கும்,மூடப்படும் கடைகளின் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு வழங்கவும் உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.