முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் பிரச்னைகளில் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு

முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் பிரச்னைகளில் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா பாராட்டு

வியாழன் , ஜனவரி 21,2016,

முல்லைப் பெரியாறு, காவிரி நதிநீர் பிரச்னைகளில் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் பாராட்டு ரோசய்யா தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையேயான பல்வேறு நதிநீர் பிரச்னைகளில், முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த ஒருங்கிணைந்த தொடர் முயற்சிகளின் பலனாக, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி அளவிற்கு உயர்த்திக்கொள்ள தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததாகவும், வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பு, முதலமைச்சரின் பாராட்டத்தக்க வெற்றிகளில் ஒன்று என்றும் ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார். அணையின் முழு கொள்ளளவான 152 அடி உயரத்திற்கு, நீர்மட்டத்தை மேலும் உயர்த்திட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பினை அரசிதழில் வெளியிடச் செய்து தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டிய முதலமைச்சரின் முயற்சி மகத்தானவை என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். இறுதித் தீர்ப்பை திறம்பட செயல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் தாமதமின்றி அமைக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார்.

மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணார்-பாலாறு-காவேரி-வைகை மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை தமிழக அரசு வலியுறுத்தி வருவதாகவும் ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார்.