6வது முறை,முதலமைச்சராக அம்மா ஜெயலலிதாவை அரியணையில் அமரச் செய்ய பாடுபடுவது என கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி தீர்மானம்

6வது முறை,முதலமைச்சராக அம்மா ஜெயலலிதாவை அரியணையில் அமரச் செய்ய பாடுபடுவது என கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி தீர்மானம்

செவ்வாய், ஜனவரி 19,2016,

வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெற வைத்து, 6வது முறையாக முதலமைச்சராக அம்மா ஜெயலலிதாவை அரியணையில் அமரச் செய்ய பாடுபடுவது என கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி உறுதி பூண்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் சென்னை தலைமைக்கழகத்தில், கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணிச் செயலாளர் திரு. ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் அடையாளமே தெரியாத வகையில் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு, மக்களை காத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திவரும் பல்வேறு நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு, பிரசுரங்கள் மூலம் தெரிவிப்பது என்றும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெற வைத்து, 6வது முறையாக தமிழக முதலமைச்சராக ஜெயலலிதாவை அரியணையில் அமரச் செய்ய பாடுபடுவது என்றும், கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி உறுதி பூண்டுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் திருமதி. பா.வளர்மதி, திருமதி. எஸ்.கோகுல இந்திரா, திரு. ஆர்.பி.உதயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர்.விஜயகுமார், கழக அமைப்புச் செயலாளர் திரு.பொன்னையன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.