605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு : பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்ட செவிலியர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு : பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்ட செவிலியர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

புதன், மார்ச் 02,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சட்டப்பேரவையில் அறிவித்ததன் அடிப்படையில், 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. பணி ஆணைகளைப் பெற்றுக்கொண்ட செவிலியர்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், அரசு அலுவலர்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்தார். பணிமூப்பு அடிப்படையில் 605 கிராம சுகாதார செவிலியர்களுக்கு, துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் 605 கிராம சுகாதார செவிலியர்கள், பள்ளி சுகாதாரத் திட்டத்திலும், புதிய சுகாதார நிலையத்திலும் பதவி உயர்வு மூலம் பணி ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. செவிலியர்களின் விருப்பத்திற்கேற்ப, பதவி உயர்வுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கியுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, செவிலியர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.