64 கோடி ரூபாய் மதிப்பில் சம்பா திறப்பு தொகுப்புத் திட்டத்தினை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

64 கோடி ரூபாய் மதிப்பில் சம்பா திறப்பு தொகுப்புத் திட்டத்தினை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள்  நன்றி

சனி, ஆகஸ்ட் 27,2016,

சம்பா சாகுபடிக்காக சிறப்புத் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்  நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், காவேரியில் தண்ணீர் கிடைக்கப்பெறாத பட்சத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்வதற்காக 64 கோடி ரூபாய் மதிப்பில் சம்பா திறப்பு தொகுப்புத் திட்டத்தினை அறிவித்ததோடு, காவேரி நடுவர்மன்ற தீர்ப்பினை நிலைநாட்டுவதற்காக உச்சநீதிமன்றத்தினை நாடப்போவதாக அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் டாக்டர். கே.எஸ். பழனிச்சாமி மற்றும் வேளாண், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.