80 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு சோலார் பம்பு செட்டுகள் ; நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

80 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு சோலார் பம்பு செட்டுகள் ; நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

சனி, டிசம்பர் 03,2016,

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சோலார் மின் பம்பு செட்டுகள் அமைக்க நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 20 விவசாயிகளுக்கு சோலார் மின் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. 80 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும் இந்த நிதிவுதவி திட்டத்தின் மூலமாக மா, நெல்லி, சிறுதானியங்கள் போன்ற பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த சோலார் மின்சார பம்பு செட்டுகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. நடராஜன் நேரில் பார்வைட்டார். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு 80 சதவீதம் மானியத்துடன் கூடிய சோலார் மின்சார பம்புசெட்டுகளுக்கான மின் இணைப்பு மேலும் 30 பேருக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.