9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வி கணினிமயமாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வி கணினிமயமாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூன் , 27 ,2017 ,செவ்வாய்க்கிழமை,

கோவை : 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வி கணினிமயமாக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளியில் நடத்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ” 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வி கணினிமயமாக்கும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.மேலும் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது பள்ளிக்கல்வி துறை பற்றிய புதிய அறிவிப்புக்கள் வெளியிடப்படும். மத்திய அரசின் தேர்வுகளை ஏதிர்கொள்ளும் வகையில் தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்று கூறினார்.

விழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.