9-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

9-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை  அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஜனவரி 07,2016,

சென்னை : வரும் சட்டமன்றத் தேர்தலில் சமூக வலைத்தளங்கள் மூலம் அதிமுக வெற்றிக்கு வியூகம் வகுக்க அதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு ஆலோசனை கூட்டங்கள் வரும் 9-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் சார்பில், எனது தலைமையிலான அரசின் தொலை நோக்கு, சமூக வலைதளங்களை கழக வளர்ச்சிக்கும், தேர்தலுக்கும் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள், செயல்பாடுகள் மற்றும் தேர்தல் யுக்திகள், தகவல் யுக்திகள் உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்வது சம்பந்தமாக, வரும் 9-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு நடைபெறும்.

9-ம் தேதி காலை 10 மணி கோயம்பேடு, திருவள்ளூர், கிழக்கு திருவள்ளூர், மேற்குகாஞ்சிபுரம், கிழக்கு காஞ்சிபுரம், மத்திய காஞ்சிபுரம், 11-ம் தேதி திங்கள் காலை 10 மணி வேலூர், கிழக்குவேலூர், மேற்கு திருவண்ணாமலை, வடக்கு திருவண்ணாமலை, தெற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி.

12-ம் தேதி செவ்வாய் காலை 10 மணி விழுப்புரம், வடக்கு விழுப்புரம், தெற்குகடலூர், கிழக்குகடலூர்.
18-ம் தேதி திங்கள் காலை 10 மணி தஞ்சாவூர், வடக்கு தஞ்சாவூர், தெற்கு நாகப்பட்டினம், திருவாரூர்.
19-ம் தேதி – செவ்வாய் காலை 10 மணி திருச்சி, மாநகர்திருச்சி, புறநகர்பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை.
21- ம் தேதி – வியாழன் மாலை 4 மணி சேலம், மாநகர் சேலம், புறநகர்நாமக்கல் ஈரோடு, மாநகர்ஈரோடு, புறநகர்கரூர்.
22-ம் தேதி காலை 10 மணி மதுரை, மாநகர்மதுரை, புறநகர் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்.
23-ம் தேதி சனி மாலை 4 மணி திருநெல்வேலி, மாநகர் திருநெல்வேலி, புறநகர்விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி.
26-ம் தேதி மாலை 4 மணி சென்னை, வட சென்னை, தென் சென்னை, இந்த ஆலோசனைக் கூட்டங்கள், கழக தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் அஸ்பயர் மு.சுவாமிநாதன் தலைமையிலும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும்.

ஆலோசனைக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், இந்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.