Latest updates from Apollo

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு

சனி, செப்டம்பர் 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். உடல் நலக் குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கீரிம்ஸ் சாலை முழுவதும் அதிமுகவினர் குவிந்துள்ளனர். முதலமைச்சர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அதிமுக தொண்டர்களும், முக்கிய

முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் : அப்பல்லோ நிர்வாகம் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் : அப்பல்லோ நிர்வாகம் தகவல்

வெள்ளி, செப்டம்பர் 23,2016, சென்னை ; முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலி காட்சிகள் மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர். ஜெயலலிதாவின்

உடல் நலக்குறைவால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி ; நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை

உடல் நலக்குறைவால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி ; நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை

வெள்ளி, செப்டம்பர்  23 , 2016, முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்றிரவு 11.30 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ப்போக்கு காரணமாக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் முதலமைச்சருக்கு மருத்துவர்கள்