முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, நாமக்கல்லில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 25 ஆயிரம் பேருக்கு பணி வழங்க ஏற்பாடு

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, நாமக்கல்லில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 25 ஆயிரம் பேருக்கு பணி வழங்க ஏற்பாடு

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க நாமக்கல் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில், தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன்படி, பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம், பல்லக்காபாளையத்தில் அரசின் வேலைவாய்ப்புத்துறை மற்றும்

தமிழக விளையாட்டுத்துறையை தேசிய, சர்வதேச அளவில் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளின் பயனாக சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச பாய்மரப் படகுப் போட்டிகள்

தமிழக விளையாட்டுத்துறையை தேசிய, சர்வதேச அளவில் உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளின் பயனாக சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச பாய்மரப் படகுப் போட்டிகள்

தமிழக விளையாட்டுத்துறையை தேசிய, சர்வதேச அளவில் உயர்த்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளின் பயனாக, சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக வீரர்கள் உள்ளிட்ட இந்திய அணியுடன் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பு… தமிழக விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பதக்கங்களைப் பெறவும், உடல் மற்றும் மன வலிமையை அடையவும் வழிவகுக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு தமிழக விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு தமிழக விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் நெஞ்சார்ந்த நன்றி

தமிழக விளையாட்டு வீரர் – வீரங்கானைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு, தமிழக விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுபடி, 85 லட்சம் ரூபாய் செலவில், விளையாட்டு வீரர்களுக்கு புதிய தங்கும் விடுதி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, கூடைப்பந்து, கையெறி பந்து ஆகிய தளங்களும் பளூ-தூக்கும் தளமும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வீரர்- வீராங்கனைகள் பயிற்சியினை சிறப்பாக

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் மத்திய ஆய்வுக் குழு ஆலோசனை : வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – மத்திய ஆய்வுக் குழுவிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய ஆய்வுக் குழுவினர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர். அவர்களிடையே பேசிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வெள்ளசேத பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்க்கால அடிப்படையிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். தமிழ்நாட்டின் கனமழை-வெள்ள பாதிப்புப் பகுதிகளில், நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியை,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி சிறப்புத் திட்டங்களின் கீழ், தமிழகம் முழுவதும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி சிறப்புத் திட்டங்களின் கீழ், தமிழகம் முழுவதும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்புத் திட்டங்களின் கீழ், தமிழகம் முழுவதும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 613 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். முத்துக்கருப்பன், திரு. விஜிலா சத்யானந்த், மேயர் திருமதி புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மடிக்கணினிகளை பெற்றுக்கொண்ட மாணவிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். வேலூர் மாவட்டம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம், சுற்றுச்சூழல் ஆய்வகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டடம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகக் கட்டடங்களை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், விருதுநகர், நாமக்கல், சிவகங்கை, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 9 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைப்பெற்ற மழைக்கால சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைப்பெற்ற மழைக்கால சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மழைக்கால சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைப்பெற்றது. சிறப்பு முகாமினை நடத்த உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர். தமிழகம் முழுவதும் மழைக் காலங்களில் கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், கால்நடை மருத்துவ முகாம்களை நடத்திட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்புதுப்பட்டு கிராமத்தில் மழைக்கால சிறப்பு கால்நடை மருத்துவமுகாம் நடைபெற்றது. இம்முகாமினை அமைச்சர் திரு.