தமிழகத்தில், கனமழை காரணமாக பொதுவிநியோக குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு நகல் அட்டைகளை உடனடியாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தில், கனமழை காரணமாக பொதுவிநியோக குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு நகல் அட்டைகளை உடனடியாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தில், கனமழை காரணமாக பொதுவிநியோக குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, உடனடியாக நகல் அட்டைகளை வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணாக்கர் அனைவருக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்னரே அனைத்துத் துறை அதிகாரிகளும் தமது ஆணையின் பேரில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், ஓரிரண்டு தினங்களிலேயே மழை, மிக

விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா : மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 855 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடனுதவி

விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழா : மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 855 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடனுதவி

விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்து 855 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. 62-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சர் திரு.ப.மோகன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த கூட்டுறவு வங்கிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்த அமைச்சர், மகளிர் சுய உதவிக்குழுக்கள்,

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதிப்பீடு செய்ய உடனடியாக, மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய உள்துறை அமைச்சரை தொலைபேசியில் வலியுறுத்தல்

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதிப்பீடு செய்ய உடனடியாக, மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய உள்துறை அமைச்சரை தொலைபேசியில் வலியுறுத்தல்

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, தாமதமின்றி உதவித் தொகையை பரிந்துரைக்க மத்தியக் குழுவை விரைந்து அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழக வெள்ள நிலைமை குறித்து எடுத்துரைத்தார். முன் எப்போதும் இல்லாத அளவில் பெய்த மழை மற்றும் வெள்ளம்

சென்னையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் – வெள்ளநீரை அகற்ற இரவு-பகலாக அதிகாரிகள், அமைச்சர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளாக அறிவிப்பு – அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் விஷமப் பிரச்சாரம் செய்வதாகவும் குற்றச்சாட்டு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுவீச்சில் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள், இரவு-பகல் பாராமல் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார். சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட, தண்டையார்பேட்டை இளையமுதலி தெரு, சேணியம்மன்

முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் M. வேணுகோபால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் பிரபு சாவ்லா ஆகியோர் சந்தித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் M. வேணுகோபால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் பிரபு சாவ்லா ஆகியோர் சந்தித்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. M. வேணுகோபால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முதன்மை ஆசிரியர் திரு. பிரபு சாவ்லா ஆகியோர் சந்தித்து, தங்களது மகன்களின் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டு அழைப்பிதழை வழங்கினர். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. M. வேணுகோபால் குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகன்

முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்தார்

முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்தார்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு. வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்து, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மஹாசம்ப்ரோஷண அழைப்பிதழை வழங்கினார். முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும், T.V.S. மோட்டார் நிறுவனத் தலைவருமான திரு. வேணு ஸ்ரீனிவாசன் சந்தித்து, வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மஹாசம்ப்ரோஷண

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்பதால், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல் : சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் மாறுதல் இல்லாத நிலையில், விலை உயர்வு நியாயமானது அல்ல என்றும் கருத்து

எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்பதால், இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் மாறுதல் ஏதும் இல்லாத நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலக சந்தையில் பெட்ரோல்-டீசல் விலை ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விலை உயர்வு நியாயமானது அல்ல என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அ.இ.அ.தி.மு.கவில் இணைந்து கழகப் பணியாற்றிட, கேரள மக்கள் ஆர்வம் – உறுப்பினர் படிவங்களைப் பெற்று, கழகத்தில் இணைய முனைப்பு

அ.இ.அ.தி.மு.கவில் இணைந்து கழகப் பணியாற்றிட, கேரள மக்கள் ஆர்வம் – உறுப்பினர் படிவங்களைப் பெற்று, கழகத்தில் இணைய முனைப்பு

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா தலைமையின் கீழ், கழகப் பணியாற்றிட, கேரள மக்கள் ஆர்வம் பூண்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.க.வில் இணைய அம்மாநில மக்கள் ஏராளமானோர் உறுப்பினர் படிவங்களை பெற்றுச் செல்கின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதித்த சிறப்பான திட்டங்களால், பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை, அ.இ.அ.தி.மு.க.விற்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், அந்தமானிலும், அ.இ.அ.தி.மு.க. வேறூன்றி விட்ட நிலையில், கேரளாவில் ஏராளமானோர்

மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமனம் : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமனம் : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், வட உள்மாவட்டங்களிலும், நாளை முதல் 17-ம் தேதி வரை மிக அதிக அளவு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வேலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அனுப்பிவைத்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முகாமிட்டுள்ள

ஆவின் நிறுவனத்தின் சார்பில், சென்னை விருகம்பாக்கத்தில் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

ஆவின் நிறுவனத்தின் சார்பில், சென்னை விருகம்பாக்கத்தில் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

ஆவின் நிறுவனத்தின் சார்பில், சென்னை விருகம்பாக்கத்தில் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், சேலம் பால் பண்ணையில் 14 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள உயர் வெப்ப பதப்படுத்துதல் மூலம் பாலை பதப்படுத்தும் இயந்திரம் மற்றும் 200 மில்லி லிட்டர் பாக்கெட் பால் நிரப்பும் இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாட்டினை துவக்கி வைத்து, 5 கோடியே