மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

செப்டம்பர் 1 , 2017 ,வெள்ளிக்கிழமை,  சென்னை : தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதா குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அனிதா இன்று தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை

பேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி : பேரறிவாளன் நன்றிக் கடிதம்

பேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி : பேரறிவாளன் நன்றிக் கடிதம்

செப்டம்பர் 1 , 2017 ,வெள்ளிக்கிழமை, சென்னை: பேரறிவாளனை 30 நாட்கள் பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நன்றி தெரிவித்தார் அற்புதம்மாள். ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த வாரம் பரோலில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் அளித்துள்ளது.இதனையடுத்து வேலூர் சிறையில் இருந்து சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார் பேரறிவாளன். அவரை உறவினர்கள், நண்பர்கள் சந்தித்துபேசி வருகின்றனர். இதனிடையே சென்னை தலைமை

அதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

அதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை

செப்டம்பர் 1 , 2017 ,வெள்ளிக்கிழமை,   சென்னை : செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு வரும் 12-ம் தேதி (செப்டம்பர் 12) அன்று வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிவி தினகரன் கூறியிருப்பதாவது:- பொதுக்குழு கூட்டத்தை அறிவித்த நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை

அ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேச்சு

அ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேச்சு

ஆகஸ்ட் 31, 2017 ,வியாழக்கிழமை, சென்னை : வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று தெரிவித்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் அஞ்சல் தலையை வெளியிட, அதனை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

ஆகஸ்ட் 30, 2017 ,புதன்கிழமை, சென்னை : அர்ஜுனா விருது பெற்ற மாரியப்பன் உள்ளிட்ட தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அர்ஜுனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு, முதல்வர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், ‘2016-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள தங்களுக்கு அர்ஜுனா விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இடையூறுகளைத் தாண்டி வெற்றிகள் பல பெற்று சாதனை படைக்க

காஞ்சிபுரத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

காஞ்சிபுரத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

ஆகஸ்ட் 30, 2017 ,புதன்கிழமை, சென்னை : காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் இன்று வண்டலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர்