ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது ; அமைச்சர் திரு.காமராஜ்

ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது ; அமைச்சர் திரு.காமராஜ்

வியாழன் , அக்டோபர் 27,2016, ஆதார் அட்டை பதிவுகளை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது என்றும், கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாயிட்ஸ் காலனி மற்றும் ஐஸ்ஹவுஸ் பகுதியில் அமுதம் மற்றும் கூட்டுறவு நியாயவிலைக் கடையில், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.காமராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, மாத ஒதுக்கீட்டின் அடிப்படையில், அத்தியாவசியப் பொருட்கள், சீரான

4 தொகுதி தேர்தல்,அதிமுகவில் 24 பொறுப்பாளர்கள் நியமனம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

4 தொகுதி தேர்தல்,அதிமுகவில் 24 பொறுப்பாளர்கள் நியமனம் ; முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , அக்டோபர் 27,2016, தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிபொதுத்தேர்தலுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியிலும், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட தலைமைக்கழக செய்திக்குறிப்பு வருமாறு:- அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு (புதுச்சேரி மாநிலம்) ஆகிய சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் 19.11.2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, 

முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டிஅ.தி.மு.க. சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீமெய்கண்ணுடையாள் அம்மனுக்கு பாலாபிஷேகம்

முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டிஅ.தி.மு.க. சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீமெய்கண்ணுடையாள் அம்மனுக்கு பாலாபிஷேகம்

புதன், அக்டோபர் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீமெய்கண்ணுடையாள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு, முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாகச் சென்று, முருகன் கோயிலை வலம் வந்து, விராலிமலை கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமெய்கண்ணுடையாள் அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு ஆராதனைகள்

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நல பெற வேண்டி கோடநாட்டில் எஸ்டேட் ஊழியர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பால்குடம் ஏந்தி சிறப்பு பூஜை

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நல பெற வேண்டி கோடநாட்டில்  எஸ்டேட் ஊழியர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் பால்குடம் ஏந்தி சிறப்பு பூஜை

புதன், அக்டோபர் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நல பெற வேண்டி,நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் எஸ்டேட் ஊழியர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் சார்பில் மாபெரும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. கோடநாட்டில் அமைந்திருக்கும் கொரமேடு ஜெய பக்தி ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் ஜெய கணபதி ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜைகள் செய்து ஆயிரத்து எட்டு பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று கிரிமி நாடு பகுதியில் உள்ள

தேவர் ஜெயந்தியையொட்டி முதல்வ ஜெயலலிதா வழங்கிய தங்கக்கவசம் : தேவர் திருவுருவச் சிலைக்கு அணிவிக்கப்பட்டது

தேவர் ஜெயந்தியையொட்டி முதல்வ  ஜெயலலிதா வழங்கிய தங்கக்கவசம் : தேவர் திருவுருவச் சிலைக்கு அணிவிக்கப்பட்டது

புதன், அக்டோபர் 26,2016, சென்னை ; தேவர் ஜெயந்தியையொட்டி, முதல்வர் ஜெயலலிதா வழங்கிய தங்கக்கவசம், பசும்பொன்னில் சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் தேவர் திருமகனார் திருவுருவச்சிலைக்கு அணிவிக்கப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தேசபக்தருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 28, 29 மற்றும் 30-ம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுவது வழக்கம். அக்டோபர் 28-ம் தேதி ஆன்மிக விழாவும், 29-ம் தேதி அரசியல் விழாவும்,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் அம்மா உணவகங்களை திறந்தது மனதிற்கு பூரிப்பை தருகிறது : சைதை துரைசாமி பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் அம்மா உணவகங்களை திறந்தது மனதிற்கு பூரிப்பை தருகிறது : சைதை துரைசாமி பேட்டி

புதன், அக்டோபர் 26,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் ‘என்னுடைய பதவி காலத்தில் அம்மா உணவகங்களை திறந்தது மனதிற்கு பூரிப்பை தருகிறது’ என்று சைதை துரைசாமி கூறினார். பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக கடந்த 2011–ம் ஆண்டு அக்டோபர் 25–ந்தேதி மேயராக சைதை துரைசாமி மற்றும் கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர். இவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். இவர்களுடைய 5 ஆண்டுகள் பதவி காலம் கடந்த 24–ந்தேதியுடன் நிறைவடைந்தது. அனைவருக்கும் நன்றி தெரிவித்து சைதை

தமிழகத்தில் கல்வித்துறை வளர்ச்சிக்காக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ; மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் அமைச்சர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் கல்வித்துறை வளர்ச்சிக்காக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ; மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் அமைச்சர்கள் வலியுறுத்தல்

புதன், அக்டோபர் 26,2016, தமிழகத்தில் கல்வித்துறை வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில்  தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினர். டெல்லியில், மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக உயர்