இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்து நெல்லித்தோப்பில் அதிமுகவினர் ஆலோசனை

இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்து நெல்லித்தோப்பில் அதிமுகவினர் ஆலோசனை

ஞாயிறு, அக்டோபர் 23,2016, புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்திசேகர் போட்டியிடுகிறார். ஓம்சக்திசேகருக்காக தேர்தல் பணி யாற்றுவது குறித்த புதுச்சேரி மாநில அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குயவர்பாளையம் நவீனாகார்டன் திருமண மண்டபத்தில் நேற்று நடை பெற்றது. அதிமுக மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். கோகுல கிருஷ்ணன் எம்பி, எம்எல்ஏக்கள் அன்பழகன், அசானா, வையாபுரி மணி கண்டன் மற்றும்

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்,அவருக்காக பிரார்த்திக்கிறேன் ; நடிகை லதா பேட்டி

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்,அவருக்காக  பிரார்த்திக்கிறேன் ; நடிகை லதா பேட்டி

ஞாயிறு, அக்டோபர் 23,2016, சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவதாக தன்னிடம் அதிமுக தலைவர்கள் தெரிவித்ததாக நடிகை லதா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க பலரும் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இன்று நடிகை லதா அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம்

முதல்வர் ஜெயலலிதா குணம் அடைய வேண்டி 9 நவதானியங்கள்,108 வகை மூலிகைகளுடன் மகா யாகம்

முதல்வர் ஜெயலலிதா குணம் அடைய வேண்டி 9 நவதானியங்கள்,108 வகை மூலிகைகளுடன்  மகா யாகம்

ஞாயிறு, அக்டோபர் 23,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி 108 வகை மூலிகைகள் மற்றும் நவதானியங்களுடன் மகா வேள்வியும் யாகமும் நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் சிறப்பு வேள்வி-யாகம் மற்றும்

முதல்வர் ஜெயலலிதா 95% குணமடைந்துவிட்டார் : மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.செளத்ரி

முதல்வர் ஜெயலலிதா 95% குணமடைந்துவிட்டார் : மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.செளத்ரி

ஞாயிறு, அக்டோபர் 23,2016, முதல்வர் ஜெயலலிதா 95 சதவீதம் குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று மத்திய அறிவியல்- தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஒய்.எஸ்.செளத்ரி கூறினார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று சனிக்கிழமை சென்று விசாரித்த பின்னர் சௌத்ரி நிருபர்களிடம் கூறியதாவது; முதல்வரின் உடல்நலம் குறித்து மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அப்பல்லோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரிடம் விசாரித்தபோது, நல்ல தகவலை அளித்தனர். முதல்வர் 95 சதவீதம் குணமடைந்து

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

ஞாயிறு, அக்டோபர் 23,2016, சென்னை; தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி, அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும்

முதல்வர் உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு 2-வது முறையாக ஆளுநர் வருகை ; உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்

முதல்வர் உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு 2-வது முறையாக ஆளுநர் வருகை ; உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்

ஞாயிறு, அக்டோபர் 23,2016, சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு, ஆளுநர் தனது நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய வித்யாசாகர் ராவ் 2-ஆவது முறையாக மருத்துவமனைக்கு நேற்று காலை 11.30 மணிக்கு வந்தார். சுமார் 30 நிமிடங்கள் அமைச்சர்கள், மருத்துவர்களை சந்தித்து பேசினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அ.தி.மு.க சார்பில் கரூர் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அ.தி.மு.க சார்பில் கரூர் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

சனி, அக்டோபர் 22,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டி, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில்  நாள்தோறும் பல்வேறு யாகங்கள், பூஜைகள், சிறப்பு தொழுகைகள், பிரார்த்தனைகள் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்ட அ.தி.மு.க கழகம் சார்பில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் அருகேயுள்ள சேங்கல் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் தமிழக முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தர்கள், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம்

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி,விளையாட்டு வீரர் – வீராங்கனைகள், கல்லூரி மாணவ – மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி,விளையாட்டு வீரர் – வீராங்கனைகள், கல்லூரி மாணவ – மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

சனி, அக்டோபர் 22,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டி, மதுரையில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர் – வீராங்கனைகள், கல்லூரி மாணவ – மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட சிறப்பு பிரார்த்தனை பேரணி நடைபெற்றது.இதில் அமைச்சர் செல்லூர் கே .ராஜு மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தமிழகத்தில் வீரர் – வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, தமிழக விளையாட்டு வீரர் –