முதலமைச்சர் ஜெயலலிதா 95% குணம் அடைந்துவிட்டார் : மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்திரி பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா 95% குணம் அடைந்துவிட்டார் : மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்திரி பேட்டி

சனி, அக்டோபர் 22,2016, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்திரி இன்று விசாரித்தார். மருத்துவர்களிடம் அவரது உடல் நலம் மற்றும் சிகிச்கைகள் குறித்து கேட்டறிந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்தேன். மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை அப்பல்லோ மருத்துவ மனை தலைவர் ஆகியோரை சந்தித்து பேசினேன். அவர்கள்

முதல்வரை ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்தார் ஆளுநர் வித்யா சாகர் ராவ் ; உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பேட்டி

முதல்வரை ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்தார் ஆளுநர் வித்யா சாகர் ராவ் ; உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பேட்டி

சனி, அக்டோபர் 22,2016, சென்னை ; சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய வித்யாசாகர் ராவ்  இன்று 2-ஆவது முறையாக மருத்துவமனைக்கு காலை 11.30 மணிக்கு வந்தார். சுமார் 30 நிமிடங்கள் அமைச்சர்கள், மருத்துவர்களை சந்தித்து பேசினார்.முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதற்கு, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முதல்வருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு, கவர்னர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக

திமுக வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம்

திமுக வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம்

சனி, அக்டோபர் 22,2016, திமுக வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடுவதாக மு.க.அழகிரியின் மகன் தயாநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் கிண்டலடித்து விமர்சித்துள்ளார்.  அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக நேற்று வெளியிட்டது. அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமியும் தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் டாக்டர் சரவணனை களம் இறக்கியுள்ளது திமுக.   திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனை திமுக நிறுத்தியுள்ளதை மு.க.அழகிரியின் மகன் தயாநிதி தனது டுவிட்டர் பக்கத்தில்

நரிக்குறவர் இன மக்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம் வள்ளியூரில் தொடங்கியது

நரிக்குறவர் இன மக்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம் வள்ளியூரில் தொடங்கியது

சனி, அக்டோபர் 22,2016, நரிக்குறவர் இன மக்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி முகாம் நெல்லை அருகே வள்ளியூரில் தொடங்கியது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் வாழ்ந்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு,அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, வீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் கைவினைப் பொருட்களை தயாரிக்கும் இரண்டு மாத இலவச பயிற்சி

முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து மக்கள் நல பணிகளை தொடர விஜயகுமார், குமரி அனந்தன் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து மக்கள் நல பணிகளை தொடர விஜயகுமார், குமரி அனந்தன் வாழ்த்து

சனி, அக்டோபர் 22,2016, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.இந் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், நடிகர் விஜயகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர்

2017-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது – இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் ; தமிழக அரசு அறிவிப்பு

2017-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது – இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் ; தமிழக அரசு அறிவிப்பு

சனி, அக்டோபர் 22,2016, 2017-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக் கொண்டு, அரிய தொண்டாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில், 2017-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in\ta\forms\teptmam\1 என்ற இணையதளத்திலிருந்து

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் சன்மானம் வழங்க வேண்டும் : தமிழக அரசு புதிய ஆணை

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் சன்மானம் வழங்க வேண்டும் : தமிழக அரசு புதிய ஆணை

சனி, அக்டோபர் 22,2016, சென்னை ; விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் சன்மானம் வழங்க வேண்டும் என்று புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை வருமாறு;  விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றி உதவி செய்பவர்கள் மற்றும் கண்கூடாக பார்த்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம். அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்காமல் முகவரியை கேட்டு கொண்டு அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும். இடர்பாடுகளில் உதவியவர்களுக்கு அரசு தக்க சன்மானம் வழங்க