முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம், உணவை அவரே உண்கிறார் ; அதிமுக செய்தித்தொடர்பாளர் பொன்னையன் தகவல்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம், உணவை அவரே உண்கிறார் ; அதிமுக செய்தித்தொடர்பாளர் பொன்னையன் தகவல்

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 21, 2016, சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கான உணவை அவரே எடுத்துக்கொள்வதாகவும் அதிமுக செய்தித்தொடர்பாளரும், அதிமுகவின் மூத்த தலைவருமான பொன்னையன் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் நலம்பெற வேண்டி அதிமுகவினர் தினந்தோறும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முதல்வர் ஜெயலலிதா பூரண நலத்துடன் இன்னும் 7 நாள்களில் வீடு திரும்புவார் : டாக்டர் எச்.வி.ஹண்டே தகவல்

முதல்வர் ஜெயலலிதா பூரண நலத்துடன் இன்னும் 7 நாள்களில் வீடு திரும்புவார் : டாக்டர் எச்.வி.ஹண்டே தகவல்

வெள்ளி, அக்டோபர் 21,2016, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா 7 -10 நாள்களுக்குள் வீடு திரும்புவார் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி. ஹண்டே கூறினார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக டாக்டர் ஹண்டே வியாழக்கிழமை மருத்துவமனைக்கு வந்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ; முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் அமெரிக்காவுக்கு மேல்

முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டார் மேலும் பல நல திட்டங்களை தமிழக மக்களுக்காக அறிவிப்பார் : அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி

முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டார் மேலும் பல நல திட்டங்களை தமிழக மக்களுக்காக அறிவிப்பார் : அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி

வியாழக்கிழமை, அக்டோபர் 20, 2016, சென்னை: உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி அதிமுகவினர் தினந்தோறும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில்,ஜெயலலிதா ஜெயலலிதா பூரண நலமடைந்துவிட்டதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி  நிருபர்களிடம் தெரிவித்தார். இது குறித்து இன்று அவர் அளித்த பேட்டியில், அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் உதவியுடன்,முதல்வர் ஜெயலலிதா விரைந்து குணமடைந்து வருகிறார். விரைவிலேயே அவர் வீடு திரும்புவார். தனது வாழ்க்கை முழுக்க தமிழக மக்கள் நலனுக்காக

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் சிகிச்சை ; உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள்  சிகிச்சை ; உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்

வியாழக்கிழமை, அக்டோபர் 20, 2016, சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிங்கப்பூர் ‘பிசியோ தெரபி’ பெண் நிபுணர்கள் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.தீவிர சிகிச்சையின் பலனாக ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் சிவகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்

அம்மாவின் காலடியில் வெற்றிக் கனியை சமர்பிப்பேன் : அப்பல்லோ மருத்துமனையில் அதிமுக வேட்பாளர் ஓம் சக்தி சேகர் பேட்டி

அம்மாவின் காலடியில் வெற்றிக் கனியை சமர்பிப்பேன் : அப்பல்லோ மருத்துமனையில் அதிமுக வேட்பாளர் ஓம் சக்தி சேகர் பேட்டி

வியாழன் , அக்டோபர் 20,2016, சென்னை: புதுச்சேரியின் நெல்லித்தோப்பு இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஓம் சக்தி சேகர், தேர்தலில் வெற்றி பெற்று வெற்றிக் கனியை முதல்வர் ஜெயலலிதாவின் காலடியில் வெற்றிக் கனியை சமர்பிப்பேன் என்று சபதமிட்டுள்ளார். புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் ஓம் சக்தி சேகர் நேற்று அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த ஓம் சக்தி சேகர், முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை

வியாழன் , அக்டோபர் 20,2016, வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி சார்பில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. பருவமழைக் காலத்தின் போது, மீட்புப் படகுகளை தயார் நிலையில் வைத்திருப்பது, நிவாரண முகாம்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வடகிழக்குப் பருவமழையின்போது, பொதுமக்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். அதன்படி, துறை வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சியின்

தமிழக அமைச்சரவை கூட்டம் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது

தமிழக அமைச்சரவை கூட்டம் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது

வியாழன் , அக்டோபர் 20,2016, சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியது. இந்தக் கூட்டத்துக்கு நிதித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். மழைகாலத்தில் எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக மற்றும் காவிரி விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில்