தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழக்கிழமை , அக்டோபர் 20, 2016, சென்னை : தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில், 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். புதுச்சேரியில் அ.தி.மு.க. சார்பில் ஓம் சக்தி சேகர் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் உள்ள 3 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்வரும், அ .தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று  அறிவித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதிக்கு வி. செந்தில் பாலாஜி, தஞ்சாவூர் தொகுதிக்கு எம்.ரங்கசாமி, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஏ.கே. போஸ், புதுச்சேரி

முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் பணியாற்ற வேண்டும் ; ஈழத்தமிழர் அமைப்பினர் வேண்டுதல்

முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் பணியாற்ற வேண்டும் ; ஈழத்தமிழர் அமைப்பினர் வேண்டுதல்

புதன், அக்டோபர் 19,2016, முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் பணியாற்ற வேண்டும் என ஈழத்தமிழர் அமைப்பினர் சார்பில் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பல்வேறு தரப்பினர் மருத்துவமனை வந்து உடல் நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். இந்நிலையில் இலங்கையில் இருந்து ஈழத்தமிழர் நட்புறவு மையம் சார்பாக ஒரு குழுவினர் நேற்று அப்பல்லோ மருத்துவமனை சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மூத்த

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ; மருத்துவர்களை சந்தித்தப்பின் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் பேட்டி

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில்  நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ; மருத்துவர்களை சந்தித்தப்பின் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் பேட்டி

புதன், அக்டோபர் 19,2016, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில்  நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.மேலும்,முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் தவிர்க்கவே அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்  தெரிவித்துள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிய அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவர்களை சந்தித்தப் பிறகு வெளியே வந்த எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்,

கிறிஸ்துமஸ், பக்ரீத், ரம்ஜான் வாழ்த்து சொல்லும் கருணாநிதி தீபாவளிக்கு ஏன் தெரிவிப்பதில்லை? தமிழிசை கேள்வி

கிறிஸ்துமஸ், பக்ரீத், ரம்ஜான் வாழ்த்து சொல்லும் கருணாநிதி தீபாவளிக்கு ஏன் தெரிவிப்பதில்லை? தமிழிசை கேள்வி

புதன், அக்டோபர் 19,2016, சென்னை ; பிரதமர் நரேந்திர மோடி  தசரா விழாவில் கலந்துகொண்டதை குறைகூறுவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கிறிஸ்துமஸ், பக்ரீத், ரம்ஜான் வாழ்த்து சொல்லும் கருணாநிதி தீபாவளிக்கு ஏன் தெரிவிப்பதில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மரியாதைக்குரிய மூத்த தலைவர் கருணாநிதி நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தசரா விழாவில் கலந்து கொண்டதையும், ஜெய் ஸ்ரீராம்

காவேரியில் தமிழகத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் ; உச்சநீதிமன்றம் உத்தரவு

காவேரியில் தமிழகத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் ; உச்சநீதிமன்றம் உத்தரவு

புதன், அக்டோபர் 19,2016, புதுடெல்லி : மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை காவிரியில் தமிழகத்திற்கு தொடர்ந்து 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் பங்கீடு குறித்து விசாரித்த நடுவர் மன்றம், 2007-ம் ஆண்டு, பிப்ரவரி 5-ம் தேதி, தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. இதன்படி, காவிரியில் ஓடும் மொத்த நீர் 740 டிஎம்சி (ஆண்டுக்கு) என அளவிடப்பட்டுள்ளது. இதில், கேரளாவுக்கு 30

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் ; முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் ; முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை

புதன், அக்டோபர் 19,2016, சென்னை ; நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. இந்தக்கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் செப்டம்பர் 22-ந்தேதி நள்ளிரவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு டாக்டர் குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 11-ந்தேதியன்று கவர்னர் (பொறுப்பு) அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதலமைச்சர்

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ; வேலைவாய்ப்பு பெற்ற பெண்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ; வேலைவாய்ப்பு பெற்ற பெண்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

புதன், அக்டோபர் 19,2016, சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம்கள் மூலம், தங்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள பெண்கள், இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தனர். மக்கள் குறைதீர்ப்பு முகாம் செவ்வாய்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று வீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுக்களை அளித்தனர். இந்நிலையில், மக்கள் குறைதீர்ப்பு