முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அ.தி.மு.க சார்பில் சிறப்பு பிரார்த்தனை

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அ.தி.மு.க சார்பில் சிறப்பு பிரார்த்தனை

செவ்வாய், அக்டோபர் 18,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தேனி மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட அ.இ.அ.தி.மு.க.வினர், பம்பையாற்றில் புனித நீராடி பம்பையில் இருந்து கோயில் வரை பாத யாத்திரையாகச் சென்றனர். பின்னர் 18 படி பூஜையில் பங்கேற்று பல்வேறு மலர்களைக் கொண்டு ஐயப்பனுக்கு

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி,அப்பல்லோ மருத்துவமனை முன்பு ஏராளமான சிறுவர், சிறுமிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி,அப்பல்லோ மருத்துவமனை முன்பு ஏராளமான சிறுவர், சிறுமிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

செவ்வாய்கிழமை, அக்டோபர் 18, 2016, சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டி, சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனை முன்பு இன்று ஏராளமான சிறுவர், சிறுமிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முதல்வர் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து பல்வேறு சிகிச்சைகளுக்கான மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருகிறது. லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் கில்நானி, அஞ்சன் திரிகா, நிதிஷ் நாயக் ஆகியோர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து

முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு 3 நாள் நோன்பிருந்து திருக்குரான் ஓதி பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு 3 நாள் நோன்பிருந்து திருக்குரான் ஓதி பிரார்த்தனை

செவ்வாய், அக்டோபர் 18,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் குணமடைய வேண்டி இன்று அப்பல்லோ மருத்துவமனை முன்பு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் 25 பேர்  முதல் 3 நாட்கள் நோன்பு இருந்து வருகின்றனர். மேலும், அப்போலோ மருத்துவமனை முன்பு 20 பள்ளி மாணவர்கள் முதல்வர் குணமடைய வேண்டி திருக்குரான் ஓதி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல முதல்வர் குணமடைய வேண்டி அதிமுக மகளிரணி சார்பில் அப்போலோ மருத்துவமனை முன்

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று மக்கள் பணியாற்றுவார் : அப்பல்லோ மருத்துவமனையில் ராதா ரவி பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று மக்கள் பணியாற்றுவார் : அப்பல்லோ மருத்துவமனையில் ராதா ரவி பேட்டி

செவ்வாய், அக்டோபர் 18,2016, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும் ஒருங் கிணைந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அரசியல் தலைவர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று பிரபல நடிகர் ராதா ரவி,முதலமைச்சர் ஜெயலலிதா உடல்

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்திற்கு நவ.19ல் தேர்தல் ; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்திற்கு நவ.19ல் தேர்தல் ; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செவ்வாய்கிழமை, அக்டோபர் 18, 2016, சென்னை : தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அடுத்த மாதம் (நவம்பர்)  19-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலின்போது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.  மேலும், திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர் சீனிவேல் மரணமடைந்ததையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று,

அ.தி.மு.க. 45-ம் ஆண்டு தொடக்க விழா ; எம்.ஜி.ஆர். திரு உருவச்சிலைக்கு மதுசூதனன் மாலை அணிவித்து மரியாதை

அ.தி.மு.க. 45-ம் ஆண்டு தொடக்க விழா ; எம்.ஜி.ஆர். திரு உருவச்சிலைக்கு மதுசூதனன் மாலை அணிவித்து மரியாதை

செவ்வாய், அக்டோபர் 18,2016, சென்னை : அ.தி.மு.க.வின் 45–வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ. தி.மு.க. தலைமைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மாலை அணிவித்தார். அ.தி.மு.கவின் 45-வது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இதையொட்டி அ.தி.மு.க அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் உருவச்சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு மாலையணிவித்து அ.தி.மு.க. கொடியை ஏற்றி