சந்திரபிம்பம் வளருவது போல உடல் நலம் தேறி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா : நாஞ்சில் சம்பத்

சந்திரபிம்பம் வளருவது போல உடல் நலம் தேறி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா  : நாஞ்சில் சம்பத்

திங்கள் , அக்டோபர் 17,2016, சென்னை: மருத்துவர்களின் சிகிச்சையால் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லண்டன் மருத்துவருடன் எய்ம்ஸ் மருத்துவக்குழுவும் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிங்கப்பூரிலிருந்து பிஸியோதெரபி மருத்துவர்களும் அப்பல்லோவுக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை புரிந்த

ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனை வந்தார் ; முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்

ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனை வந்தார் ; முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்

ஞாயிறு, அக்டோபர் 16,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று விசாரித்தார்.முதல்வர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கீரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை 6-35  மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு கார் மூலம் நுழைந்தார், அங்கு முதல்வருக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களையும் மூத்த

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி

ஞாயிறு,அக்டோபர் 16,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனையில் திரண்ட நிருபர்களிடம் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறினார். அ. தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி,அம்மா என்ற எழுத்து வடிவில் அமர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சிறப்பு பிரார்த்தனை

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி,அம்மா என்ற எழுத்து வடிவில் அமர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சிறப்பு பிரார்த்தனை

ஞாயிறு, அக்டோபர் 16,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம்பெற வேண்டி, புதுக்கோட்டை அருகே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண நலம்பெற வேண்டி, கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர், வழிபாடு மற்றும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட

முதல்வர் ஜெயலலிதா நலமடைய வேண்டி கேரளாவில் வரலட்சுமி சரத்குமார் சிறப்பு பூஜை

முதல்வர் ஜெயலலிதா நலமடைய வேண்டி கேரளாவில் வரலட்சுமி சரத்குமார் சிறப்பு பூஜை

ஞாயிறு, அக்டோபர் 16,2016, திருவனந்தபுரம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி கேரளாவில் சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைபாடு காரணமாக சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். லண்டன், சிங்கப்பூர், எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தவருகின்றனர். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது அம்மாவுடன்

முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து ’பவர்ஃபுல்’ தலைவராக வருவார் : குருவாயூர் ஸ்ரீ சூரிய நம்பூதிரிகள்

முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து ’பவர்ஃபுல்’ தலைவராக வருவார் :   குருவாயூர் ஸ்ரீ சூரிய நம்பூதிரிகள்

சனி, அக்டோபர் 15,2016, முதலமைச்சர் ஜெயலலிதா  பூரண குணமடைந்து மிகப்பெரிய சக்தியாக வலம் வருவார் என கேரளாவின் பிரபலமான ஜோதிடர் குருவாயூர் ஸ்ரீ சூரிய நம்பூதிரிகள் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் ஸ்ரீ சூரிய மங்களம் தாந்திரீக வித்யா பீடம் உள்ளது. இது ஜோதிடத்திற்கு மிகவும் பிரசித்து பெற்றது. இந்த மடத்தின் பீடாதிபதியாக பிரம்ம ஸ்ரீ சூரியன் நம்பூதிரி அவர்கள் உள்ளார்.   இந்நிலையில், சூரியன் நம்பூதிரி அவர்கள் வியாழக்கிழமை நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதிக்கு