முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு

சனி, அக்டோபர் 15,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் ஒரேநேரத்தில் கோவில்களில் நெய் தீபம் ஏற்றி மக்கள் பிரார்த்தனை நடத்தினர். முதல்வர் ஜெயலலிதா, விரைவில் பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள திருக்கோயில்களில் இன்று காலை 6.30 மணியிலிருந்து 7.00 மணி வரை, ஒரே நேரத்தில் சிறப்பு தீப வழிபாடுகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் கோடானகோடி பொதுமக்கள், கோயில்களில்  நெய் தீபங்கள் ஏற்றி, முதல்வர் விரைவில் பூரண

தீபஒளித் திருநாளுக்கு சென்னையில்இருந்து 21 ஆயிரத்து 289 சிறப்பு பேருந்துகள் ; தமிழக அரசு ஏற்பாடு

தீபஒளித் திருநாளுக்கு சென்னையில்இருந்து 21 ஆயிரத்து 289 சிறப்பு பேருந்துகள் ; தமிழக அரசு ஏற்பாடு

சனி, அக்டோபர் 15,2016, சென்னை, தீபாவளி திருநாளை தமிழக மக்கள், தங்கள் சொந்த ஊரில் கொண்டாட ஏதுவாக வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலிருந்து தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்து 289 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழக மக்கள், தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு வசதியாக, கடந்த ஐந்து

அ.தி.மு.க,வின் 45-வது ஆண்டு துவக்க விழா : 17-ம் தேதி எம்.ஜி.ஆர். சிலைக்கு மதுசூதனன் மாலை அணவிக்கிறார்

அ.தி.மு.க,வின் 45-வது ஆண்டு துவக்க விழா : 17-ம் தேதி எம்.ஜி.ஆர். சிலைக்கு மதுசூதனன் மாலை அணவிக்கிறார்

சனி, அக்டோபர் 15,2016, சென்னை ; அ தி.மு.க.வின் 45-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அ தி.மு.க. தலைமைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு 17–ம் தேதி காலை 10 மணிக்கு  அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவிக்கிறார். அ  தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து துவக்க விழா மலரையும் வெளியிடுகிறார். இது குறித்து அ தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– எம்.ஜி.ஆர். அதி.மு.க.வை தொடங்கி 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 17.10.2016 திங்கட்கிழமை

பூரண குணமடைந்து முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: முன்னாள் ஆளுநர் ரோசய்யா

பூரண குணமடைந்து முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: முன்னாள் ஆளுநர் ரோசய்யா

சனி, அக்டோபர் 15,2016, சென்னை: பூரண குணமடைந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிரைவில் வீடு திரும்புவார் என தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல்,  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என  அதிமுகவினர் பல்வேறு வித பிரார்த்தனைகளில்  ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய மேலும் 2 பேர் கைது

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய மேலும் 2 பேர் கைது

வெள்ளி, அக்டோபர் 14,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய மேலும் 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக 48 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்