முதலமைச்சர் அலுவலக கோப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிடுவார் அரசாணை வெளியீடு

முதலமைச்சர் அலுவலக கோப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிடுவார் அரசாணை வெளியீடு

வெள்ளி, அக்டோபர் 14,2016, முதலமைச்சரின் துறைகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக் கப்பட்டதாக கவர்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.முதலமைச்சர் அலுவலக கோப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிடுவார் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ் ணன் மற்றும் அரசுத்துறைச் செயலாளர்கள் தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்திருந்தனர். அரசுப் பணிகளும் துரிதமாக நடைபெற்றன. பொதுவாக, முக்கிய கோப்புகளில் அரசு அதிகாரிகள் கையொப்பமிட்ட

முதலமைச்சர் ஜெயலலிதா பூரணமடைய வேண்டி கரூர் தர்ஹாவில் சிறப்பு தொழுகை

முதலமைச்சர் ஜெயலலிதா பூரணமடைய வேண்டி கரூர் தர்ஹாவில் சிறப்பு தொழுகை

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 14, அ.தி.மு.க சார்பில், தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி நாள்தோறும் கோயில், மசூதி, தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படுகிறது. இந்நிலையில், கரூர் மாவடியான் கோயில் தெருவில் உள்ள பாச்சுமியான் தர்காவில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி சிறப்பு தொழுகைகள் நடைப்பெற்றது. மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் நடைப்பெற்ற இந்த தொழுகையில், நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவுச் செயலாளர் சையத்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் நீதா அம்பானி நேரில் நலம் விசாரிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் நீதா அம்பானி நேரில் நலம் விசாரிப்பு

வியாழன்,அக்டோபர் 13,2016, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந் நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.முதலமைச்சரின் சிகிச்சை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக லண்டன்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி,பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் நேரில் விசாரிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி,பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா  ஆகியோர் நேரில் விசாரிப்பு

புதன்,அக்டோபர் 12,2016, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில்,முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய டெல்லியில் இருந்து பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் இன்று விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற அமித்ஷா மற்றும் அருண்ஜெட்லி

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு

புதன்,அக்டோபர் 12,2016, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், முதலமைச்சர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தனியார் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் 10 பேரை கொண்ட குழுவை அமைத்து சென்னை காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தக் குழு பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு : ஆளுநர் அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு : ஆளுநர் அறிவிப்பு

புதன்,அக்டோபர் 12,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதால் அவரது இலாக்காக்கள், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனில் இருந்து வந்த தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டுஜான் பீலே மற்றும் டெல்லி

தமிழக மக்கள் பிரார்த்தனையால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் : ச.ம.கட்சியின் தலைவர் சரத்குமார்

தமிழக மக்கள் பிரார்த்தனையால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் : ச.ம.கட்சியின் தலைவர் சரத்குமார்

புதன்,அக்டோபர் 12,2016, முதல்வர் ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; ”முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் சென்று முதல்வரின் உடல்நலம் குறித்து மூத்த அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன். மீண்டும் ஒரு வாரத்துக்கு முன்பு சென்று மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் முதல்வரின் உடல்நலம்

முதலமைச்சருக்கு செயற்கை சுவாசம்,பிசியோதெரப்பி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது ; அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

முதலமைச்சருக்கு செயற்கை சுவாசம்,பிசியோதெரப்பி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது ; அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

செவ்வாய்,அக்டோபர் 11,2016, முதலமைச்சருக்கு செயற்கை சுவாசம், பிசியோதெரப்பி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. முதலமைச்சருக்கு செயற்கை சுவாச உதவி, ஆன்டிபயோடிக்ஸ், ஊட்டச்சத்து, பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக