முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் அவர் உடல் நலம் குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும் ; தா.பாண்டியன்

முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார் அவர் உடல் நலம் குறித்து  அவதூறு பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும் ; தா.பாண்டியன்

வெள்ளி, அக்டோபர் 07,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தனர்.மேலும் முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு பரப்புவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.  முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி அனைத்து சமய மக்களும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தி வருகின்றனர். அப்பல்லோ மருத்துவமனையில்

முதல்வர் உடல்நிலை குறித்த விவரங்களை வெளியிடக் கோரிய டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி

முதல்வர் உடல்நிலை குறித்த விவரங்களை வெளியிடக் கோரிய டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி

வெள்ளி, அக்டோபர் 07,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரத்தை அரசு தெரிவிக்கக் கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. முன்னதாக இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோ ரைக் கொண்ட அமர்வில் டிராபிக் ராமசாமி கடந்த செவ்வாய்க்கிழமை முறையிட்டார். ஆனால்,

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் ; அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேட்டி

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் ; அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேட்டி

வெள்ளி, அக்டோபர் 07,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என அதிமுக மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து 15-வது நாளாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் சிறப்பு வழிபாடு

வெள்ளி, அக்டோபர் 07,2016, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றில் அ.இ.அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்ட ஜெ. ஜெயலலிதா பேரவை சார்பில் வி.கைகாட்டி பகுதியில் உள்ள அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் விளக்கு பூஜையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரக்கழகம் சார்பில், விநாயகர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட கழக

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ; சில நாட்கள் மருத்துமனையில் தங்கி ஓய்வு எடுக்க வேண்டும்,அப்பல்லோ மருத்துமனை அறிக்கை

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ; சில  நாட்கள் மருத்துமனையில் தங்கி ஓய்வு எடுக்க வேண்டும்,அப்பல்லோ மருத்துமனை அறிக்கை

வெள்ளி, அக்டோபர் 07,2016, சென்னை ; முதலமைச்சர் ஜெயலலிதா படிப்படியாக குணம் அடைந்து வருகிறார் என்றும், சில நாட்கள் ஆஸ்பத்திரியில் அவர் தங்கி இருக்க வேண்டும் என்றும் அப்பல்லோ மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து நேற்று இரவில் அப்பல்லோ மருத்துமனை நிர்வாகம் வெளியிட்ட மருத்துவக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைகிறது. தேவையான ‘ஆன்டிபயாடிக்’குகள், சுவாச உதவி மற்றும் அதனுடன் தொடர்புடைய