உள்ளாட்சித் தேர்தல் திடீர் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் திடீர் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய், அக்டோபர் 04,2016, தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தலை நடத்தி முடிக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து அதுவரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக, அக்டோபர் 17, 19-ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று, செப்டம்பர் 26-ஆம் தேதி மாநிலத் தேர்தல்

ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் : அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை

ஜெயலலிதா உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் : அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை

செவ்வாய், அக்டோபர் 04,2016, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை இன்று புதிய அறிக்கையை  வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; ‘‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதுவரை வழங்கப்பட்டு வந்த சிகிச்சையே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தகவல்

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தகவல்

செவ்வாய், அக்டோபர் 04,2016, முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக அதிமுக தலைவர்கள் தன்னிடம் உறுதிபட தெரிவித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சென்றார். அ.தி.மு.க மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விரிவாக கேட்டறிந்தார். இதன் பின்னர் மருத்துவமனைக்கு வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முதல்வர்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ; அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ; அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி

செவ்வாய், அக்டோபர் 04,2016, சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22–ந் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர

காவிரிப் பிரச்சனையில் கருணாநிதி தொடர்ந்து நாடகமாடுகிறார் : லட்சியத் தி.மு.க. டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

காவிரிப் பிரச்சனையில் கருணாநிதி தொடர்ந்து நாடகமாடுகிறார் : லட்சியத் தி.மு.க. டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

செவ்வாய், அக்டோபர் 04,2016, காவிரிப் பிரச்சனையில் திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து நாடகமாடி வருவதாக லட்சியத் தி.மு.க. தலைவர்  டி.ராஜேந்தர் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர்,காவிரி தண்ணீருக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று உரிமைக்குரல் கொடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா,ஈழத்தமிழர் பிரச்சனைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியவர், அவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் என் மனநிலை பாதிக்கப்பட்டது. அதனால் நான் பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை.நான் தஞ்சை மாவட்டக்காரன், காரி கலக்கும் பூம்புகாருக்கும் பக்கத்துக்கு