உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள்,முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகளை கூறி தீவிர வாக்கு சேகரிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள்,முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகளை கூறி தீவிர வாக்கு சேகரிப்பு

திங்கள் , அக்டோபர் 03,2016, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், வரும் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், மாநகராட்சிகள், மாவட்ட ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் எண்ணற்ற சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் விளக்கமாக எடுத்துக்கூறி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பெருநகர சென்னை மாநகராட்சி 8-ஆவது வார்டில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, திருவொற்றியூர்,

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றம் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றம் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

திங்கள் , அக்டோபர் 03,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் அவரது உடல் நிலை நன்றாக குணமடைந்து வருகிறது. லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பியாலே சென்னை வந்து, முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனையின்படி முதல்வருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குணமடைந்து வரும் முதல்வர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அப்பல்லோ மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்ட பத்திரிகை

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது : ஆளுநர் வித்யாசாகர் ராவ் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது : ஆளுநர் வித்யாசாகர் ராவ் தகவல்

ஞாயிறு, அக்டோபர் 02,2016, அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குணமாகி வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி வியாழக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6.40 மணியளவில் தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் (பொறுப்பு) மருத்துவமனைக்கு சென்றார். இதனால் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கினர் ; மக்கள் உற்சாக வரவேற்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கினர் ; மக்கள் உற்சாக வரவேற்பு

சனி, அக்டோபர் 01,2016, சென்னை  ; முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் நேற்று  தங்களது பிரச்சாரத்தை துவக்கினர். சென்ற இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டார்கள். தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19–ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. தேர்தல் தேதி கடந்த 25–ம் தேதி அன்று மாலை அறிவிக்கப்பட்டது. தேர்தல்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர் சிகிச்சை : பண்ருட்டி ராமச்சந்திரன்

சனி, அக்டோபர் 01,2016, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது குறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருந்தார். இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பவும், புகைப்படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தவும் கருணாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்

முதல்வர் ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக பேசுகிறார் ; அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி பேட்டி

முதல்வர் ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக பேசுகிறார் ; அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி பேட்டி

சனி, அக்டோபர் 01,2016, அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரசுவதி நேற்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முதல்வர் ஜெயலலிதா எப்படி இருக்கிறார்கள்?.  நலமாக இருக்கிறார்கள். ஒரு பிரச்னையும் இல்லை.  முதல்வர் உடல் நலம் குறித்து பரவும் வதந்திக்கு யார் காரணம்? தேவையில்லாதவர்கள் வேலை இல்லாதவர்கள் செய்யும் வேலை இது. நல்ல விஷயத்தை சொல்லலாம். சட்டம், ஒழுங்கு பாதிக்க அவர்கள் செய்கிற வேலை. மருத்துவமனை நிர்வாகமே தெளிவாக முதல்வர் ஜெயலலிதா