முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ தகவல்

வெள்ளி, செப்டம்பர் 30,2016, முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளதாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 1 வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டு வருகிறது. தற்போது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ‛‛உடல் நல குறைவு

தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு அரசியல் சாசன உணர்வை மீறுகிறது ; முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு அரசியல் சாசன உணர்வை  மீறுகிறது ; முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

வெள்ளி, செப்டம்பர் 30,2016, கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட மறுப்பது அரசியல் சாசன உணர்வை வேண்டுமென்றே மீறுவதாகும் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உரையை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.ராமமோகனராவ் வாசித்தார். சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுக்கிணங்க கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக தமிழ்நாடு மற்றும்

உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய நடிகர் சங்கம் வாழ்த்து

உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய நடிகர் சங்கம் வாழ்த்து

வியாழன் , செப்டம்பர் 29,2016, உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய நடிகர் சங்க உறுப்பினர்கள் பிரார்த்திப்பதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார் இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ் மக்களுக்காக, தமிழர்களின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்து பயணிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றும் உங்களை நோக்கி எங்களின் கரங்களை குவிக்கிறோம். விரைவில் பூரண குணமடைந்து வரும் நாளுக்காக தென்னிந்திய நடிகர்

சம்பா சாகுபடிக்காக திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாகை மாவட்ட எல்லையை வந்தடைந்தது ; முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

சம்பா சாகுபடிக்காக திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாகை மாவட்ட எல்லையை வந்தடைந்தது ; முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி

வியாழன் , செப்டம்பர் 29,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சம்பா சாகுபடிக்காக திறந்துவிடப்பட்ட காவேரி நீர் நாகை மாவட்ட எல்லையை வந்தடைந்தது. விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர். முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சம்பா சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, நேற்று காலை நாகை மாவட்டத்தை வந்தடைந்தது. நாகை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளில் உள்ள நீர்தேக்கியில் தண்ணீர் வந்தடைந்தது. அங்கு, விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மலர்தூவி

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ; 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ; 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள்

வியாழன் , செப்டம்பர் 29,2016, சென்னை : மின்வாரியம், போக்குவரத்துக்கழகம், உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்மூலம் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8400-ம், அதிகபட்சமாக ரூ.16800-ம் கிடைக்கும். இதன்மூலம் 3 லட்சத்து 67 ஆயிரத்து 887 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிவிப்பில்; லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்-பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம்