முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள,அ.தி.மு.க.வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள,அ.தி.மு.க.வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல்

புதன், செப்டம்பர் 28,2016, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த, அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில், அடுத்த மாதம் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 31 மாவட்ட ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பெயர்களை, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும்

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு ; மருத்துவமனையில் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு ; மருத்துவமனையில் அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை

புதன், செப்டம்பர் 28,2016, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு குறித்து,சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில்  தலைமைச்செயலாளர் டாக்டர் ராம மோகன ராவ், அட்வகேட் ஜெனரல்  ஆர் .முத்துகுமாரசுவாமி, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்,  முதல்வரின் முதன்மைச் செயலாளர் கே.என்.வெங்கட் ராமன் மற்றும் முதல்வரின் செயலாளர் ஏ.ராமலிங்கம்  ஆகியோர் கலந்து கொண்டார்கள். முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக அரசு காவிரியில் அடுத்து 3

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீண்டும் இடைக்கால மனு

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீண்டும் இடைக்கால மனு

செவ்வாய், செப்டம்பர் 27,2016, புதுடெல்லி  ;  காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீண்டும் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மேலும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசின் எந்த மனுவையும் விசாரிக்கக் கூடாது எனவும் அந்த மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. காவிரிப் பிரச்னை தொடர்பாக, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்த இடைக்கால மனுவில்,

சாலை விபத்தில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சாலை விபத்தில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், செப்டம்பர் 27,2016, அரியலூரில் நடந்த சாலை விபத்தில் பலியான 15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம் கச்சிப்பெருமாள் எனும் இடத்தில் லாரியும், வேனும் மோதிய விபத்து குறித்த செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில் 11 நபர்கள்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பு வழிபாடு

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பு வழிபாடு

செவ்வாய், செப்டம்பர் 27,2016, முதலமைச்சர் ஜெயலலிதா, பரிபூரண உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு திருக்கோயில்களில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழகம் சார்பில், சந்தவெளி அம்மன் கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்போரூர் ஒன்றியக் கழகம் சார்பில், கோவளத்தில் அமைந்துள்ள உறசரத் சையத் தமீம் அன்சாரி தர்காவில் தொழுகை நடத்தப்பட்டது. மகானுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே அரசு அலுவல்களை கவனித்தார் முதல்வர் ஜெயலலிதா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே அரசு அலுவல்களை கவனித்தார் முதல்வர் ஜெயலலிதா

சென்னை ; அ.தி.மு.க. பொது செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி இரவு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்களின் கண்காணிப்பிலேயே அவருக்கு அவ்வப்போது பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5-வது நாளாக நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏற்கனவே எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சீரான இடைவெளியில் டாக்டர்கள் குழுவினர் அவருடைய உடல்நிலையை பரிசோதித்து வருகின்றனர். ஆஸ்பத்திரி உள்ளே சென்று