12 மாநகராட்சிகளிலும் அதிமுக தனித்துப் போட்டி : அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா

12 மாநகராட்சிகளிலும் அதிமுக தனித்துப் போட்டி : அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா

செவ்வாய், செப்டம்பர் 27,2016, சென்னை  ; தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த மாதம் 17-ம் தேதி மற்றும் 19-ம் தேதிகளில் தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார். தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களிலும் அதிமுக தனித்துப்

வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் பயனாளிகளிடம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன ; விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் பயனாளிகளிடம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன ; விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

திங்கள் , செப்டம்பர் 26,2016, வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில்,சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் விவசாயிகளிடம் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டம், ஒட்டை என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 450 சிறு-குறு விவசாயிகளுக்கு 6 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய அதிமுக இலக்கிய அணி செயலாளர் வளர்மதி சார்பில் சிறப்பு வழிபாடு

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய அதிமுக இலக்கிய அணி செயலாளர் வளர்மதி சார்பில் சிறப்பு வழிபாடு

திங்கள் , செப்டம்பர் 26,2016, சென்னை : முதல்வர்  ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி அதிமுக இலக்கிய அணி சார்பில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சென்னை கோயிலில் கால பைரவருக்கு ராகு கால சிறப்பு பூஜை நடத்தினார். முதல்வர்  ஜெயலலிதா பூரணகுணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டி சென்னை அசோக்நகர் அருகே அருள்மிகு மல்லிக்கேஸ்வர் திருக்கோயிலில் கால பைரவருக்கு ராகு கால சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதிமுக இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி இந்த சிறப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா ஓரிரு நாளில் வீடு திரும்புவார்,வெளிநாட்டுச் சிகிச்சை அவசியமில்லை ; அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதா ஓரிரு நாளில் வீடு திரும்புவார்,வெளிநாட்டுச் சிகிச்சை அவசியமில்லை ; அப்பல்லோ மருத்துவர்கள் தகவல்

திங்கள் , செப்டம்பர் 26,2016, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இன்னும் ஓரிரு நாள்களில் வீடு திரும்பி, தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார். வெளிநாட்டுச் சிகிச்சை அவருக்கு அவசியமில்லை. அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்திதான் என்று அவருக்குச் சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். முதல்வரின் உடல் நலம் குறித்தும்

தமிழக உள்ளாட்சி தேர்தல் ; அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது

தமிழக உள்ளாட்சி தேர்தல் ; அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது

திங்கள் , செப்டம்பர் 26,2016, சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 21-ம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான பதவி காலம் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து