‘நீட்’ தேர்வு பிரச்சினையில் தமிழக மாணவர்களை பாதுகாப்போம் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

‘நீட்’ தேர்வு பிரச்சினையில் தமிழக மாணவர்களை பாதுகாப்போம் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

ஜூலை ,19 ,2017 ,புதன்கிழமை,  சென்னை :  ‘நீட்’ தேர்வு பிரச்சினையில் தமிழக மாணவர்கள் நலன் பாதுகாப்போம் என்று சட்டசபையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உறுதிபட கூறினார். ‘நீட்’ தேர்வை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே மாநில அரசு அம்மாவின் அரசு தான் என்றும் அவர் கூறினார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நீட் தேர்வு பற்றி பேசினார். மாநில பாடத் திட்டத்தில் 4.2 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். சிபிஎஸ்இ

மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்பில் 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு

ஜூலை ,18 ,2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை : மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கிய 85 சதவீத இடங்களை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நீட் எனும் தகுதித் தேர்வால் தமிழக மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மார்க் இருந்த போதும் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் இல்லாததால் மருத்துவ படிப்பு என்பதே தமிழக மாணவர்களுக்கு இல்லாத ஒன்றாகிவிட்டது. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் கிராம மக்களுக்கு கிணறை அன்பளிபாக வழங்க தயார் : ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

பெரியகுளம் கிராம மக்களுக்கு கிணறை அன்பளிபாக வழங்க தயார் : ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஜூலை ,18 ,2017 ,செவ்வாய்க்கிழமை,  தேனி :  பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள எனது கிணறு, நிலத்தை கிராம மக்களுக்கு அன்பளிப்பாக தர உள்ளேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம்  ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான 40 ஏக்கர் தோட்டம் உள்ளது. இந்த பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான  கிணற்றுக்கு அருகே ஓ. பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் இன்னொரு கிணறு வெட்டியதால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டதாக கிராம மக்கள்

தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி : ரூ 13 லட்சம் உதவித்தொகை வழங்கவும் உத்தரவு

தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி : ரூ 13 லட்சம் உதவித்தொகை வழங்கவும் உத்தரவு

ஜூலை ,17 ,2017 ,திங்கட்கிழமை, சென்னை : சென்னை  பேக்கரி உணவகத்தில்  ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்திற்கு ரூ 13 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும்,அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:- சென்னை மாவட்டம், பெரம்பூர் வட்டம், மீனாம்பாள் சாலை, சிட்கோ நகர் மெயின் ரோடு சந்திப்பு, கவியரசு கண்ணதாசன் நகரில் இயங்கி

மக்கள் நலனுக்காக மெழுகுவர்த்தியாக தன்னை உருக்கி தியாகம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் : ஓ.பன்னீர்செல்வம்

மக்கள் நலனுக்காக மெழுகுவர்த்தியாக தன்னை உருக்கி தியாகம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் : ஓ.பன்னீர்செல்வம்

ஜூலை ,16 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை,  விருதுநகர் : விருதுநகர் கே.வி.எஸ்.பள்ளி வளாகத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வித்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை தாங்கினார்.  விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- மக்கள் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக கருதி அவற்றுக்கு தீர்வு கண்டவர் காமராஜர். மக்கள் நலனுக்காக மெழுகுவர்த்தியாக தன்னை உருக்கி தியாகம் செய்தவர். அதனால் தான் அவரது புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கிறது.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்தாவிட்டால் கமல்ஹாசன் மீது வழக்கு : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரிக்கை

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்தாவிட்டால் கமல்ஹாசன் மீது வழக்கு : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரிக்கை

ஜூலை ,16 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை, கோவை : தமிழக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்தவில்லை என்றால் நடிகர் கமல் மீது வழக்கு தொடரப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள காயத்ரி ரகுராம், ‘சேரி பிஹேவியர்’ என்று இழிவாக பேசினார். இதற்கு மக்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர் கமலஹாசனை கைது