கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நன்றி

கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நன்றி

ஞாயிறு, செப்டம்பர் 25,2016, முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கடந்த 20-ம் தேதிமுதல், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் மற்றும் டெல்டா பகுதிகளில் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.  இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் இரவு கல்லணை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, சம்பா சாகுபடி பணிகளுக்காக கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பொங்கிவந்த காவேரியை, அமைச்சர்கள், அதிகாரிகள்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் சென்னையில் மேலும் 107 அம்மா உணவகங்கள் ; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் சென்னையில் மேலும் 107 அம்மா உணவகங்கள் ; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்

ஞாயிறு, செப்டம்பர் 25,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி சென்னை 35-வதுவார்டு எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி அம்மா உணவகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேலும் 107 அம்மா உணவகங்கள் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. அம்மா உணவகங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டிஜெயக்குமார், ஆணையாளர் தா.கார்த்திகேயன், எம்எல்ஏக்கள் பி.வெற்றிவேல், ஆர்.நடராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- ஏழைகள் சுகாதாரமான, தரமான உணவு வகைகளை மலிவு விலையில் பெற்று பயனடையும் வகையில்,

முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற கமல்ஹாசன், ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற கமல்ஹாசன், ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்து

ஞாயிறு, செப்டம்பர் 25,2016, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தன் ட்விட்டர்  பக்கத்தில், “அன்புள்ள சி.எம். அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். நடிகர்கள் கமல்ஹாசன், விஷால், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர், முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் விரைவில் முழு

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் ; விரைவில் வீடு திரும்புவார் என தகவல்

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் ; விரைவில் வீடு திரும்புவார் என தகவல்

ஞாயிறு, செப்டம்பர் 25,2016, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதால், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில் நிபுணர்கள் குழு மூலம் அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட

வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மற்றும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றிக் கடிதம்

வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் மற்றும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றிக் கடிதம்

சனி, செப்டம்பர் 24,2016, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, விரைவில் நலம் பெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றிக்கடிதம் அனுப்பியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மலர்க்கொத்துடன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், அன்புள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களே, தாங்கள் விரைந்து குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய வாழ்த்துச்செய்தியில்,