தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் போதுமானதல்ல ; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஆட்சேப மனுத் தாக்கல்

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் போதுமானதல்ல ; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஆட்சேப மனுத் தாக்கல்

சனி, செப்டம்பர் 24,2016, புதுடெல்லி  – காவிரி மேற்பார்வைக் குழுவின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு 3,000 கன அடிநீரை திறந்துவிட உத்தரவிட்டது காவிரி மேற்பார்வைக் குழு. அக்கூட்டத்திலேயே தமிழக அரசு இதை ஏற்க மறுத்துவிட்டது. இதனிடையே சுப்ரீம்கோர்ட் தமிழகத்துக்கு 6,000 கன அடிநீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது.  காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான மனுவை விசாரித்த‌ சுப்ரீம்கோர்ட், ‘த‌மிழகத்துக்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல்

முதற்கட்டமாக 50 இடங்களில்,அம்மா வை-பை வசதி, இலவச இணையதளம் தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

முதற்கட்டமாக 50 இடங்களில்,அம்மா வை-பை வசதி, இலவச இணையதளம் தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, செப்டம்பர் 24,2016, சென்னை, தேர்தலில் அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வைஃபை மண்டலம்’ ஏற்படுத்தவும், முதற்கட்டமாக 50 பள்ளிகளில் வை-பை எனப்படும் கம்பியில்லா இலவச இணையதள வசதி ஏற்படுத்தப்படும். என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அனைத்து மக்களும் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி, உலகை சிறிய பரப்புடையதாக்கி ‘உலகமே சிறு கிராமம்’ என்று

திருக்கோயில்களில் திருப்பணிக்கான நிதியுதவியை 50,000 ரூபாயிலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திருக்கோயில்களில் திருப்பணிக்கான நிதியுதவியை 50,000 ரூபாயிலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சனி, செப்டம்பர் 24,2016, சென்னை, கிராமப்புற திருக்கோயில்களின் திருப்பணி மற்றும் பழுதுபார்க்கும் பணிக்கு திருக்கோயில் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும்  நிதி உதவித் தொகையினை 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக  உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- திருக்கோயில்கள் நமது பண்பாட்டையும் நாகரீகத்தையும் உலகத்திற்கு எடுத்து இயம்பும் சின்னங்களாக விளங்குகிறது. திருக்கோயில்கள் மக்களுக்கு மன அமைதியையும், மன நிறைவையும் அளிக்கின்றன. இத்திருக்கோயில்கள், ஆன்மீகச் சிந்தனையையும், அற உணர்வினையும் சமுதாயத்திற்கு வழங்குவதுடன்

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர், ஆளுநர்,மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர், ஆளுநர்,மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சனி, செப்டம்பர் 24,2016, முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளார் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் பூங்கொத்துக்களை அனுப்பி விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய செய்தியில், ‘விரைவில் நலம்பெற

முதலமைச்சர் விரைவில் குணமடைய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, சரத்குமார் உள்ளிட்டோர் பிரார்த்தனை

முதலமைச்சர் விரைவில் குணமடைய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, சரத்குமார் உள்ளிட்டோர் பிரார்த்தனை

சனி, செப்டம்பர் 24,2016, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் நீர்ப்போக்கு காரணமாக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை

காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா குணமடைந்தார் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா குணமடைந்தார் : அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சனி, செப்டம்பர் 24,2016, சென்னை, முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது  என்றும், முதல்வர் ஜெயலலிதா வழக்கமான உணவு உட்கொள்கிறார் என்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருக்கிறது. கடந்த 21-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, சின்னமலையில் இருந்து விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் கமுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம், 200 புதிய பேருந்துகள், 12 ஆயிரத்து 500 பேருக்கு தாலிக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு