சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; கிறிஸ்தவ ஐக்கிய பேரவை பாராட்டு

சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; கிறிஸ்தவ ஐக்கிய பேரவை பாராட்டு

வெள்ளி, செப்டம்பர் 23,2016, முதமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், தமிழகத்தில் உள்ள தேவாலயங்கள் பழுதுபார்ப்பு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டம், உலகில் உள்ள கிறிஸ்துவ நாடுகளில் கூட நிறைவேற்றப்படாத ஒரு முன்னோடித் திட்டம் என கிறிஸ்துவ ஐக்கிய பேரவை தெரிவித்துள்ளது. கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்த்தல் மற்றும் புணரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள நடப்பு நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி திட்டத்தை அண்மையில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். உலகில் உள்ள கிறிஸ்துவ

ஏழை மாணவி கலைவாணியின் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றார் முதல்வர் ஜெயலலிதா ; முதலமைச்சருக்கு,மாணவி கலைவாணி நன்றி

ஏழை மாணவி கலைவாணியின் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றார் முதல்வர் ஜெயலலிதா ; முதலமைச்சருக்கு,மாணவி கலைவாணி நன்றி

வெள்ளி, செப்டம்பர் 23,2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, வட சென்னை மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவி கலைவாணியின் ஏழ்மை நிலையை அறிந்து, அவரது பிசியோதெரபி படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டு கல்லூரிக் கட்டணமாக 75 ஆயிரம் ரூபாயை கலைவாணியிடம் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள வட சென்னை மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, புதுவண்ணாரப்பேட்டையைச்

கமுதியில் ரூ.4,536 கோடியில் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் – முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

கமுதியில் ரூ.4,536 கோடியில் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் – முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

வெள்ளி, செப்டம்பர் 23,2016, சென்னை : ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ரூ.4,536 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது; முதலமைச்சர் ஜெயலலிதா 21-ந்தேதி அன்று தலைமைச் செயலகத்தில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அதானி கிரீன் எனர்ஜி (தமிழ்நாடு) லிமிடெட் நிறுவனத்தால் 4536 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள 648 மெகாவாட்

மாணவர்கள் பயன்பெறும் வகையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 10 தொகுப்பு புத்தகங்கள் : முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

மாணவர்கள் பயன்பெறும் வகையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 10 தொகுப்பு புத்தகங்கள் : முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

வெள்ளி, செப்டம்பர் 23,2016, அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 10 தொகுப்பு புத்தகங்களை முதல்வர் ஜெயலலிதா மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணனிடம் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், மருத்துவக் கல்வி பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக 75 ஆயிரம் ரூபாய்

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான ஊக்கம் அளித்து வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பாராட்டு

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான ஊக்கம் அளித்து வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா ; மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பாராட்டு

வெள்ளி, செப்டம்பர் 23,2016, தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு பலகோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதுடன், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் திரு.விஜய் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். பாராலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரியோ-டி-ஜெனிரோ நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஒன்று புள்ளி எட்டு ஒன்பது

உடல் நலக்குறைவால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி ; நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை

உடல் நலக்குறைவால் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி ; நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை

வெள்ளி, செப்டம்பர்  23 , 2016, முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்றிரவு 11.30 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ப்போக்கு காரணமாக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் முதலமைச்சருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

12,500 பேருக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

12,500 பேருக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

வெள்ளி, செப்டம்பர் 23,2016, சென்னை : முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், 2016-2017ம் நிதியாண்டிற்கான திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 12,500 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் அடையாளமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார். சமூக நலத் துறையின் மூலம், ஏழை பெற்றோர்களின் பெண்கள்,