கடலில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கடலில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , செப்டம்பர் 19,2016, சென்னை; மீன் பிடிக்க சென்றபோது படகு உடைந்து பலியான மற்றும் மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை, தண்டையார்பேட்டை வட்டம், வ.உ.சி. நகர், சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சரவணன், ராஜி ஆகிய இருவரும் கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் 7–ந் தேதி விசைப் படகில் கடலில் மீன் பிடிக்கும் பணியை மேற்கொண்டிருந்த போது, படகு

ஆதிதிராவிடர்,பழங்குடியினர் பயன்பெரும் வகையில் புதிய திட்டங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஆதிதிராவிடர்,பழங்குடியினர் பயன்பெரும் வகையில் புதிய திட்டங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , செப்டம்பர் 19,2016, சென்னை : ரூ 7.50 கோடி செலவில்  துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 1,000 ஆதிதிராவிட விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு மேலும் ரூ.13 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்,  இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட  அறிக்கை; ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு ஏனையோருக்கு இணையான கல்வி மற்றும்

மசூதிகள்,கிறிஸ்தவ தேவாலயங்களை,சீரமைக்க ரூ.4 கோடி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மசூதிகள்,கிறிஸ்தவ தேவாலயங்களை,சீரமைக்க ரூ.4 கோடி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , செப்டம்பர் 19,2016, கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள், தர்காக்களை மேம்படுத்த ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதிமுக தேர்தல் அறிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பழுதுபார்த்தல், சீரமைத்தல் பணிகளுக்கென மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேவாலயங்களுக்கு ரூ.1 கோடி: இந்த வகையில், கிறிஸ்தவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு- புனரமைப்புப் பணிகளுக்காக ரூ.3 லட்சம் வரை மானியமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகளுக்கென நிகழாண்டுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

ஏழை,எளிய மக்களுக்காக தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஏழை,எளிய மக்களுக்காக தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிறு , செப்டம்பர் 18,2016,  சென்னை, ஏழை, எளிய மக்களுக்காக ஏ.சி. உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் தமிழகத்தில் 11 இடங்களில் ரூ.83 கே்ாடி செலவில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்றும், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு ரூ.3 ஆயிரத்து 58 கோடி மதிப்பீட்டில் 55 ஆயிரத்து 47 குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-    ஏழை, எளிய மக்கள், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை