இன்று பிரதமர் மோடி பிறந்தநாள் ; முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

இன்று பிரதமர் மோடி பிறந்தநாள் ; முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஞாயிறு , செப்டம்பர் 18,2016, சென்னை, பிரதமர் மோடியின் 66-வது பிறந்தநாளையொட்டி  முதல்வர் ஜெயலலிதா அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். பிரதமர் மோடியின் 66-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா, மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக்கடிதத்தில், ‘‘மகிழ்ச்சிகரமான உங்களுடைய இன்றைய பிறந்தநாளில் இனிவரும் ஆண்டுகள், அற்புதமாக அமைய என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டுக்கும், மக்களுக்கும் அரும்பணியாற்ற பல்லாண்டு வல்லமையும், நல்ல ஆரோக்கியமும் தர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்’ ’என்று முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.  

சென்னையில் வாழும் கன்னட மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி

சென்னையில் வாழும் கன்னட மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி

சனி, செப்டம்பர் 17,2016, சென்னை;சென்னையில் வாழும் கன்னட மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.  காவேரி நதிநீர் பிரச்சனையில், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில், சென்னையில் வாழும் கன்னட மக்கள் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்களுக்கு முழு பாதுகாப்பு அளித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதேபோல, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கும் அம்மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

காவேரி நதிநீர் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

காவேரி நதிநீர் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

சனி, செப்டம்பர் 17,2016, சென்னை  ; காவேரி நதிநீர் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.  சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், காவேரியிலிருந்து தமிழகத்திற்கு முறைப்படி கொடுக்க வேண்டிய தண்ணீரையே கர்நாடக அரசு கொடுத்து வருவதாக குறிப்பிட்டார். கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பை அம்மாநில அரசு உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு 149 புதிய வீடுகள் வழங்கப்பட்டன : முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பயனாளிகள் நன்றி

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு 149 புதிய வீடுகள்  வழங்கப்பட்டன : முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பயனாளிகள் நன்றி

வெள்ளி, செப்டம்பர் 16,2016, இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தூத்துக்குடியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 149 புதிய வீடுகள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன. தூத்துக்குடி சிலோன் காலனியில், வேலைக்காக இலங்கை சென்றுவிட்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பிய தமிழர்கள், நீண்டகாலமாக குடிசை வீடுகளில் வசித்து வந்தனர். இதனை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தாயுள்ளத்துடன் அவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 149 புதிய வீடுகள்