சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான வேளாண் கடன் தள்ளுபடி ; சான்றிதழ்களை பெற்ற விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான வேளாண் கடன் தள்ளுபடி ; சான்றிதழ்களை பெற்ற விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  நன்றி

வெள்ளி, செப்டம்பர் 16,2016, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் விவசாயிகளிடம் வழங்கப்பட்டன. அவற்றை பெற்றுக் கொண்ட விவசாயிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர். வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 25 ஆயிரத்து

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா அ.இ.அ.தி.மு.க. சார்பில் உற்சாக கொண்டாட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா அ.இ.அ.தி.மு.க. சார்பில் உற்சாக கொண்டாட்டம்

வெள்ளி, செப்டம்பர் 16,2016, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பபட்டது. கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளான நேற்று, புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சார்பாக, கழக மக்களவைக் குழு செயலாளர் டாக்டர்

பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு,அவரது திருவுருவச் சிலைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு,அவரது திருவுருவச் சிலைக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை

வெள்ளி, செப்டம்பர் 16,2016, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணாவின் 108-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் முதலமைச்சர் வெளியிட்டார். பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 108-ஆவது பிறந்த நாளான நேற்று காலை, சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் 126 காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் 126 காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , செப்டம்பர் 15,2016, அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் 126 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மான வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழகத்தில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல்படை மற்றும் தமிழக விரல்ரேகைப்பிரிவு அலுவலர்களின் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை பாராட்டும் வகையிலும்,

கொரட்டூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த பூச்சிகள் உற்பத்தியாகும் இடம் கண்டுபிடிப்பு ; வேளாண்மை பல்கலைக்கழக குழுவினர் சாதனை

கொரட்டூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த பூச்சிகள் உற்பத்தியாகும் இடம் கண்டுபிடிப்பு ; வேளாண்மை பல்கலைக்கழக குழுவினர் சாதனை

வியாழன் , செப்டம்பர் 15,2016,   சென்னை ; கொரட்டூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சிகள் உற்பத்தியாகும் இடத்தை வேளாண்மை பல்கலைக்கழக குழுவினர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். சென்னை கொரட்டூர் ஏரியை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சிகளால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்பட்டு வந்தது. இதை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ‘ஸ்கைரோனமஸ்’ பூச்சிகளின் தொல்லையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி,