மனிதநேயத்தின் மறுபெயர் முதலமைச்சர் ஜெயலலிதா ; மாநகராட்சி கூட்டத்தில் சைதை துரைசாமி புகழாரம்

மனிதநேயத்தின் மறுபெயர் முதலமைச்சர் ஜெயலலிதா ; மாநகராட்சி கூட்டத்தில் சைதை துரைசாமி புகழாரம்

சனி, செப்டம்பர் 10,2016, சென்னை ; மனிதநேயத்தின் இன்னொரு பெயர் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், அவருக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன் என்றும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி உருக்கமாக பேசினார். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: முதலமைச்சர் ஜெயலலிதா தன் வண்ண எண்ணத்தால், எங்களுக்கு மட்டுமல்ல, எண்களுக்கும் மதிப்பு கூட்டுபவர், அதற்கு எடுத்துக்காட்டுதான் 110. விதி 110-ன் மூலம் புத்தம்புது திட்டங்களுக்கு புதுப்பிறவி அளிப்பவர் ஏழை, எளியோருக்கு புனர்ஜென்மம் தருபவர் முதலமைச்சர் ஜெயலலிதா. முதலமைச்சர் ஜெயலலிதாவின்

கோவில் திருவிழாவில் மின்சார விபத்தில் உயிரிழந்த நான்குபேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கோவில் திருவிழாவில் மின்சார விபத்தில் உயிரிழந்த நான்குபேர் குடும்பத்திற்கு  தலா ரூ.1 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, செப்டம்பர் 09,2016, சென்னை : திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், உவரி கிராமத்தில் மாதா கோவில் திருவிழா சப்பர பவனியின் போது மின்சார விபத்தில் உயிரிழந்த நான்குபேர் குடும்பத்திற்கு  தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா த்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட  அறிக்கை வருமாறு:- திருநெல்வேலி மாவட்டம்,  இராதாபுரம் வட்டம், கரைசுத்து

முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சியால் காவிரி நீர் தமிழகம் வந்தடைந்தது ; விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்

முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சியால் காவிரி நீர் தமிழகம் வந்தடைந்தது ; விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்

வெள்ளி, செப்டம்பர் 09,2016, கிருஷ்ணகிரி : முதல்வர் ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சியால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து கர்நாடகம் திறந்துவிட்ட காவிரி நீர் நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. தமிழக எல்லையை அடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். காவிரி நதிநீர் தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. திங்கட்கிழமை பிறப்பித்த இந்த உத்தரவில், தமிழகத்திற்கு உடனடி நிவாரணமாக

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 15ம் தேதிமுதல் 17ம் தேதிவரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 15ம் தேதிமுதல் 17ம் தேதிவரை அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, செப்டம்பர் 09,2016, முன்னாள் முதல்வர் அண்ணாவின் 108-வது பிறந்த தினத்தை ஒட்டி, அதிமுக சார்பில் பொதுக் கூட்டங்களை நடத்த கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து, நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில்; பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 108-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 15 முதல் 17 வரை மூன்று நாள்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்டச் செயலாளர்கள்,

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு : முதல்வர் ஜெயலலிதாவிற்கு சரத்குமார், பழ.நெடுமாறன் பாராட்டு

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு : முதல்வர் ஜெயலலிதாவிற்கு சரத்குமார், பழ.நெடுமாறன் பாராட்டு

வியாழன் , செப்டம்பர் 08,2016, சென்னை: காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைக்கு சரத் குமார், பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ச.ம.க. தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது. இரு தரப்பினருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட தீர்ப்பை மதித்து போராட்டங்களை கைவிட்டு ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும். காவிரி நீர் பிரச்சனையில் முழுவீச்சாக போராடிக்கொண்டு இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனைத்துக் கட்சிகளும்