கலாம் சாட்’ தயாரித்த மாணவர் குழுவுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

கலாம் சாட்’ தயாரித்த மாணவர் குழுவுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஜூலை ,13 ,2017 ,வியாழக்கிழமை,  சென்னை : கலாம் சாட் என்ற பெயரில் மிகச்சிறிய செயற்கைக்கோளை உருவாக்கிய கரூர் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிஃபாத் சாருக் தலைமையிலான மாணவர் குழுவினருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வ‌ழங்கினார். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் திரு. ரிஃபாத் சாருக் தலைமையிலான ஆறு மாணவர்கள் கொண்ட குழு 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கினர். அவர்கள் உருவாக்கிய இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில்

ஸ்குவாஷ்’ வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஸ்குவாஷ்’ வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

ஜூலை ,12 ,2017 ,புதன்கிழமை,  சென்னை : முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று  ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார். அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயரிய

விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட்டுகள் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட்டுகள் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,12 ,2017 ,புதன்கிழமை,  சென்னை : 1000 விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட்டுகள் 90 சதவீத மானியத்ததில் வழங்கப்படும் என்று சட்டசபையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சட்டசபையில் நேற்று விதி 110ன் கீழ் முதல்வர்எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:- தற்போது நிலவி வரும் வறட்சியினை கருத்தில் கொண்டு, குறைந்த நீரில் அதிக விளைச்சலும், விவசாயிகளுக்கு வருமானமும் தரும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியினை

கச்சத்தீவை மீட்டு,கடல் எல்லையை மறுவரையறை செய்வதே மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கச்சத்தீவை மீட்டு,கடல் எல்லையை மறுவரையறை செய்வதே மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜூலை ,11 ,2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை: கச்சத்தீவை மீட்பதும், கடல் எல்லையை மறுவரையறை செய்வதும் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நீடித்த தீர்வை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ”புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டினம் பகுதியிலிருந்து கடந்த 8-ம் தேதி விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. இவ்வாறு

48 மணி நேரத்துக்குள் சாதிச்சான்றிதழ் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

48 மணி நேரத்துக்குள் சாதிச்சான்றிதழ் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

ஜூலை ,11 ,2017 ,செவ்வாய்க்கிழமை, சென்னை : விண்ணப்பித்த 48 மணிநேரத்திற்குள் விரைவு சாதிச்சான்றிதழ்கள் வழங்கும் திட்டம்  மற்றும் 3.50 லட்சம் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கல் உள்ளிட்ட 23 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் நேற்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார். தமிழக சட்டசபையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைமானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  23 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:- வீடற்ற ஏழை மக்களுக்கு 2017-2018-ம் நிதியாண்டில் 3.50 லட்சம்

ஆசிய தடகளப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆசிய தடகளப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம் பரிசு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,10 ,2017 ,திங்கட்கிழமை, சென்னை : ஆசிய தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம், ஆரோக்கிய ராஜிவுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 5 ஆயிரம் மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. லட்சுமணன் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும், நான்கு இன்ட்டு 400 மீட்டர் தொடர்

தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையை மீட்டு தர வேண்டும் : மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையை மீட்டு தர வேண்டும் : மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

ஜூலை ,09 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை, சென்னை : பாரம்பரிய பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமையை மீட்டு தர வேண்டும் என்று மத்திய அரசை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக மீனவர்கள் பாரம்பரியம், பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் கடற்பகுதிகளில் கூட மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை இடையூறு செய்து கொண்டிருக்கிறது. கைது செய்வதும், சிறைபிடிப்பதும், சித்திரவதை செய்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்களின்