விவசாயிகளுக்கு புதிய சலுகைகள்,சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80% மானியம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

விவசாயிகளுக்கு புதிய சலுகைகள்,சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80% மானியம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , செப்டம்பர் 01,2016, 10 குதிரைத் திறன் கொண்ட சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், ரூ.21 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீட்டில், 20 ஆயிரத்து 55 ஏக்கர் மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணைய முறை பரவலாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று  பேரவை விதி 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள்: நாட்டின்

சிறு வணிகர்களுக்கு உதவ வணிக வரி அலுவலகங்களில் கட்டணமில்லா உதவி மையங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சிறு வணிகர்களுக்கு உதவ வணிக வரி அலுவலகங்களில் கட்டணமில்லா உதவி மையங்கள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , செப்டம்பர் 01,2016, சிறு வணிகர்களுக்கு உதவ 228 வணிக வரி அலுவலகங்களில் கட்டணமில்லா உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று புதன்கிழமை பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வணிக வரித் துறை, பதிவுத் துறை சார்ந்த அறிவிப்புகள்: மக்களுக்கான திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்வதற்கு தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதில் வணிக வரித் துறையும், பதிவுத் துறையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தை வளர்ச்சிப்

தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிக் காலம் நிறைவு : தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிக் காலம் நிறைவு : தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பு

வியாழன் , செப்டம்பர் 01,2016, தமிழக ஆளுநராக சென்னமனேனி வித்யாசாகர் ராவை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர ஆளுநராகப் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவுக்கு இந்தப் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக் காலம், கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர முன்னாள் முதல்வரான ரோசய்யாவை தமிழகத்தின் ஆளுநராக கடந்த 2011-ஆம் ஆண்டில் முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு நியமித்தது. கடந்த

அதிமுக ஆட்சியின் நூறாவது நாள் ; முதல்வர் ஜெயலலிதாவிற்கு சரத்குமார் வாழ்த்து

அதிமுக ஆட்சியின் நூறாவது நாள் ; முதல்வர் ஜெயலலிதாவிற்கு சரத்குமார் வாழ்த்து

வியாழன் , செப்டம்பர் 01,2016, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்து 100 நாள் நிறைவடைந்ததற்கு சமக தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ”எம்.ஜி.ஆரின் வரலாற்றுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரே கட்சி 2-வது முறையாக ஆட்சி அமைப்பது என்பது தற்போதுதான். அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்த பெருமையை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவையே சாரும்.மக்கள் பணியே அறப்பணி என்ற நோக்கில் அல்லும்

அதிமுக ஆட்சியின் நூறாவது நாள் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு

அதிமுக ஆட்சியின் நூறாவது நாள் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு

வியாழன் , செப்டம்பர் 01,2016, அதிமுக ஆட்சியின் நூறு நாள்களை ஒட்டி, சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், பேரவை மண்டபம் முழுவதும் மல்லிகை, ரோஜா மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிமுக அரசின் நூறு நாள்கள் நிறைவைக் கொண்டாடும் வகையில், சட்டப்பேரவை முழுவதும் வாசம் நிறைந்த மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் மாலைகள் செய்யப்பட்டு, ஆங்காங்கே தோரணம் தொங்கவிடப்பட்டிருந்தது. தலைமைச் செயலகத்துக்கு உள்ளே நுழையும் வாயிலில், வாழை மரங்களால் தோரணம் கட்டப்பட்டிருந்தது. அதிமுக