சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வெள்ளி, ஆகஸ்ட் 26, சென்னை, சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு, 22-ம் தேதி இயற்கை எய்திய சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர் நாதன் மறைவுக்கு தமிழக அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிங்கப்பூர் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் கீழ்க்கண்ட இரங்கல் செய்தியை பதிவு செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடந்த 22-ம் தேதி

உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலம்: வேளாண்மை துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு பேச்சு

உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலம்: வேளாண்மை துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு பேச்சு

வெள்ளி, ஆகஸ்ட் 26,2016, உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என்றார் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் சங்க மாநில மாநாட்டில் அவர் மேலும் பேசியது: “இருமடங்கு உற்பத்தி; மூன்று மடங்கு லாபம்’ என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வேளாண்மைத் துறையில் பொற்காலத்தை ஏற்படுத்தி வருகிறார். உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. வேளாண்மைத் துறைக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிக நிதி ஒதுக்கீடு

தமிழகம் உயர்கல்வித் துறையில் 44% வளர்ச்சி அடைந்துள்ளது : அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தமிழகம் உயர்கல்வித் துறையில் 44% வளர்ச்சி அடைந்துள்ளது : அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

வெள்ளி, ஆகஸ்ட் 26,2016, தமிழகம் உயர்கல்வித் துறையில் 44 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உயர்கல்வித் துறை மூலம் அமைக்கப்பட்ட அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் 2016-17ஆம் ஆண்டிற்கான வகுப்புகளைத் துவக்கிவைத்து அவர் நேற்று  வியாழக்கிழமை பேசியதாவது: கல்வியில் அனைவரும் சமநிலை பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கொடைக்கானலைத் தலைமை இடமாக கொண்டு அன்னை தெரசா பல்கலைக்கழத்தை

டெல்டா விவசாயத்தை பாதுகாக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி 960 கோடி செலவில் திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

டெல்டா விவசாயத்தை பாதுகாக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி 960 கோடி செலவில் திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

வெள்ளி, ஆகஸ்ட் 26,2016, திருவாரூர் மாவட்டத்தில் டெல்டா விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, முதல் கட்டமாக 960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல்நீர் உட்புகா வண்ணம் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளான திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில், ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாசன ஆறு மற்றும் இறவை பாசன திட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ்

சாலை விபத்தில் மறைந்த அ.தி.மு.க வழக்கறிஞர் பாக்கியம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சாலை விபத்தில் மறைந்த அ.தி.மு.க வழக்கறிஞர் பாக்கியம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

வியாழன், ஆகஸ்ட் 25,2016, சென்னை : சாலை விபத்தில் மறைந்த அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாக்கியம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் கே.ஆர்.பாக்கியம் சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அன்புச்சகோதரர் பாக்கியத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது

ரூ.13.65 கோடியில் 6 மீன்குஞ்சு உற்பத்திப் பண்ணைகள் மேம்படுத்தப்படும் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.13.65 கோடியில் 6 மீன்குஞ்சு உற்பத்திப் பண்ணைகள் மேம்படுத்தப்படும் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஆகஸ்ட் 25,2016, தமிழகத்தில் 6 இடங்களில் உள்ள மீன்குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணைகள் ரூ.13.65 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.மேலும், கடலோர காவல், கப்பல் படை தகுதித் தேர்வுகளில் பங்கேற்பதற்கான ஆண்டுதோறும் 300 மீனவ இளைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் நேற்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, உள்நாட்டு மீன் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.