உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் இறந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் இறந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

திங்கள் , ஆகஸ்ட் 22,2016, சென்னை : உடல்நலக்குறைவு மற்றும் சாலை விபத்தில் பலியான 14 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பண்ருட்டி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த துரை, கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த மோகன்தாஸ், சங்கரன்கோவில் போக்குவரத்துப் பிரிவு காவல்

பாலாறு தடுப்பணையில் தவறி விழுந்த விவசாயி சீனிவாசன் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சீனிவாசன் குடும்பத்தினர் நன்றி

பாலாறு தடுப்பணையில் தவறி விழுந்த விவசாயி சீனிவாசன் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சீனிவாசன் குடும்பத்தினர் நன்றி

ஞாயிறு, ஆகஸ்ட் 21,2016, சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை மீது நின்று தவறி விழுந்து உயிரிழந்த கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, 3 லட்சம் ரூபாய் நேற்று வழங்கப்பட்டது. நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட சீனிவாசனின் மனைவி காமாட்சி, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார். கடந்த மாதம் 29-ம் தேதி வாணியம்பாடி வட்டம் புல்லூர் மதுரா கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், சித்தூர் மாவட்டம்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் சாக்‌ஷிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் சாக்‌ஷிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஞாயிறு, ஆகஸ்ட் 21,2016, சென்னை:ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாக்‌ஷிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்கள் மனதுவைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,  ”ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்மிண்டன்

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு,உணவுப்பொருட்கள் பதுக்கலை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு.ஹேம் பாண்டே பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு,உணவுப்பொருட்கள் பதுக்கலை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு.ஹேம் பாண்டே பாராட்டு

சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2016, அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலை தடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான  தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மற்ற மாநில அரசுகள் பின்பற்ற வேண்டுமென, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், அனைத்து மாநிலங்களின் உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல்துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு.ஹேம் பாண்டே,முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான  தமிழக அரசு உறுதியான,

இலங்கைத் தமிழர்கள் மீது தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா : இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிதம்பி யோகேஸ்வரன் பேட்டி

இலங்கைத் தமிழர்கள் மீது தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுகிறார்  முதலமைச்சர் ஜெயலலிதா : இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிதம்பி யோகேஸ்வரன் பேட்டி

சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2016, ஈழத்தமிழர்களின் உரிமையையும், நலன்களையும் நிலைநாட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றி அதனை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீது தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருவதாலும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ஈழத்தமிழர்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த இலங்கை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சீனிதம்பி யோகேஸ்வரன், செய்தியாளர்களிடம் பேசியபோது,