புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க மாவட்ட கழக செயலாளர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க மாவட்ட கழக செயலாளர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்

வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலைமைச்சருமான ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கழக செயலாளர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், முதலைமைச்சருமான ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு.வெல்லமண்டி என்.நடராஜன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.வி.அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளர் திரு.சி.த.செல்லபாண்டியன், திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.K.R.P.பிரபாகரன்

கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு உயர்வு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு உயர்வு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016, தமிழ் நாட்டில் உள்ள 1,161 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் கருத்தில் கொண்டும், 1–4–2016 முதல் கூட்டுறவு அமைப்பில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை கூலியில் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  நேற்று

திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டக்கழகச் புதிய செயலாளர்கள் நியமனம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டக்கழகச் புதிய செயலாளர்கள் நியமனம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டக்கழகச் செயலாளர்களை நியமித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா  நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், திருச்சி மாநகர் மாவட்டக்கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.ஆர்.மனோகரன், இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், அவருக்கு பதிலாக அப்பொறுப்பில் திருச்சி மாவட்ட கழக அவைத்தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு.வெல்லமண்டி என்.நடராஜன் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில், ஏழை எளிய மக்களுக்காக 12 லட்சத்து 33 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன ; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில், ஏழை எளிய மக்களுக்காக 12 லட்சத்து 33 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன ; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் உட்பட ஏழை எளிய மக்களுக்காக, 12 லட்சத்து 33 ஆயிரத்து 262 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று , வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி, கடந்த 5 ஆண்டுகளில், முதலமைச்சர்

சட்டசபையில் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் ; சபாநாயகர் தனபால் நடவடிக்கை

சட்டசபையில் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் ; சபாநாயகர் தனபால் நடவடிக்கை

வியாழக்கிழமை , ஆகஸ்ட் 18, 2016, தமிழக சட்டப்பேரவையை நடத்தவிடாமல், தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல்-குழப்பம் ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பேரவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்து வரும் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் ஒருவார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து சட்டப்பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் நேற்று வீட்டு வசதித்துறை, தகவல் தொழில்நுட்ப துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்தில் கலந்து கொண்டு அ. தி.மு.க. உறுப்பினர் குணசேகரன் பேசினார்.