அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து அமைச்சர் சண்முகநாதன் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து அமைச்சர் சண்முகநாதன் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

புதன்கிழமை, ஆகஸ்ட் 17, 2016, சென்னை: அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து அமைச்சர் சண்முகநாதனை நீக்கி, கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதனுக்கு பதிலாக செல்லபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்  மனோகரனுக்கு பதில் வெல்லமண்டி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

புதன்கிழமை, ஆகஸ்ட் 17, 2016, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து, முதல்போக பாசனத்திற்கு, இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து, வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும்

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 போலீசார் உட்பட 23 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 போலீசார் உட்பட 23 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, ஆகஸ்ட் 17, 2016, சென்னை : உடல் நலக்குறைவு, சாலை விபத்தில் பலியான 19 போலீசார் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., 27.4.2016 அன்று சென்னை பெருநகர காவல் ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த எம்.பழனி,  28.4.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வாளராகப்

நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016, சென்னை:அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் தாய் திருநாட்டின் வளர்ச்சிக்காக நம் கடமையை உணர்ந்து, அனைவரும்அயராது பாடுபட வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். 70-வது சுதந்திர தினவிழாவையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்துச்செய்தி வருமாறு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத்திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மண்ணிலிருந்து