குமரி மாவட்டத்தில்,கூடுதல் வருவாய் கிடைக்க அரசு மானியத்துடன் உளுந்து சாகுபடி செய்யும் திட்டம் ; விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

குமரி மாவட்டத்தில்,கூடுதல் வருவாய் கிடைக்க அரசு மானியத்துடன் உளுந்து சாகுபடி செய்யும் திட்டம் ; விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி

சனி, ஆகஸ்ட் 13,2016, கன்னியாகுமரி மாவட்டத்தில், நெல் வயல் வரப்புகளில் ஊடுபயிராக அரசு மானியத்துடன் உளுந்து சாகுபடி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். முதலமைச்சர்  ஜெயலிலதா அறிவித்துள்ள 2-ம் பசுமைப்புரட்சித் திட்டத்தின்கீழ், குறைந்த முதலீட்டில் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும் வகையில், நெல் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டி வருகின்றனர். விவசாயிகளுக்கு மேலும் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், வயல்களில் உள்ள வரப்புகளில், ஊடுபயிர் வளர்க்கும் திட்டத்தை

2.5 ஏக்கர் நிலம் தருவதாக சொல்லி நெல்லிக்கனி அளவு கூட தராதவர் கருணாநிதி : சட்டசபையில் துரைமுருகனுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி

2.5 ஏக்கர் நிலம் தருவதாக சொல்லி நெல்லிக்கனி அளவு கூட தராதவர் கருணாநிதி : சட்டசபையில் துரைமுருகனுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி

சனி, ஆகஸ்ட் 13,2016, சென்னை:2.5 ஏக்கர் நிலம் தருவதாக சொல்லிவிட்டு நெல்லிக்கனி அளவு கூட தராதவர் கருணாநிதி என்று சட்டசபையில் எதிர்க்கட்சித்துணை தலைவர் துரைமுருகனுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி கொடுத்தார்.  தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா , 110 வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளுக்கு பின்னர் சட்டமன்றத்தில் சபாநாயகர் தனபால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிமுன் அன்சாரி, தனியரசு, உள்ளிட்டோர் முதல்வர்  ஜெயலலிதாவை பாராட்டி பேசினார். திடீரென துரைமுருகன் எழுந்து பேச

இலவச கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி திட்டம் விரைவில் அமல் படுத்த படும் : அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி தகவல்

இலவச கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி திட்டம் விரைவில் அமல் படுத்த படும் : அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி தகவல்

சனி, ஆகஸ்ட் 13,2016, தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு 5 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்ட இலவச கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி திட்டம் நிகழாண்டிலேயே மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது என தமிழக கால்நடை பாராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ண ரெட்டி கூறினார். கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான 8 ஆவது பண்ணை-செல்லப் பிராணிகளுக்கான மருத்துவச் சிகிச்சை பயிற்சிக் கருத்தரங்கம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில்

சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நடிகர் சங்கம் பாராட்டு

சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நடிகர் சங்கம் பாராட்டு

சனி, ஆகஸ்ட் 13,2016, திரைப்பட கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருது வழங்க பிரம்மாண்ட விழா நடத்தப்படும் என நேற்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அச்சங்கம்  வெளியிட்டுள்ள செய்தி; கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டாக மிகப்பெரிய விழா எடுத்து விருதுகள் வழங்கப்படும் என்று பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தது ஒட்டு மொத்த திரையுலகத்தினருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. இந்த

சினிமா கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விரைவில் விருது வழங்கப்படும் ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சினிமா கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விரைவில் விருது வழங்கப்படும் ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, ஆகஸ்ட் 13,2016, சென்னை, தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்க பிரம்மாண்டமான விழா விரைவில் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் செய்தித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் நேற்று  தி.மு.க உறுப்பினர் நடிகர் வாகை சந்திர சேகர் பங்கேற்று பேசினார். அப்போது கடந்த ஐந்தாண்டுகளாக திரைப்படத்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய விருதுகள் வழங்கப்படவில்லை என்று கூறினார். அதற்கு முதல்வர்  ஜெயலலிதா பதிலளித்து கூறியதாவது., உறுப்பினருக்கு தெரியுமோ, தெரியாதோ. முந்தைய தி.மு.க. ஆட்சியில்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு இலவசம் ; தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவிப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு இலவசம் ; தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவிப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 12,2016, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருவித செறிவூட்டப்பட்ட அயோடின் உப்பு இலவசமாக வழங்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார். சட்டப்பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து நேற்று எம்.சி.சம்பத் வெளியிட்ட அறிவிப்புகள்: அம்மா சிமென்ட் திட்டத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.1 கோடி செலவில் நேரடிப் பதிவு -கண்காணிக்கும் முறை, தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், சிமென்ட் திட்டத்தைத் திறம்பட கண்காணிக்க மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு 65 கையடக்கக்