ரூ.2 கோடியில் வண்டலூரில் 300 மரத்தாவர வகைகளுடன் ‘மரப்பூங்கா’; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ரூ.2 கோடியில் வண்டலூரில் 300 மரத்தாவர வகைகளுடன் ‘மரப்பூங்கா’; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 12,2016, சென்னை:வன மரபியல் வளங்களை பாதுகாக்க ரூ.2 கோடியில் வண்டலூரில் 300 மரத்தாவர வகைகளுடன் மரப்பூங்கா அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட  அறிக்கை வருமாறு: “காடு செழித்திருந்தால் தான் நாடு செழித்திருக்கும்”” என்பது ஆன்றோர்வாக்கு. மண் வளப் பாதுகாப்பு, தூய காற்று உருவாக்குதல், பல்லுயிர் பன்மைபாதுகாப்பு என ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கு வனங்கள் உறுதுணையாக அமைந்துள்ளன. 2013 முதல் 2015 வரையிலான

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மெட்ரோ ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆந்திராவுக்கு சென்றது ஏன்?முதல்வர் ஜெயலலிதா கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய திமுக உறுப்பினர்

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மெட்ரோ ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆந்திராவுக்கு சென்றது ஏன்?முதல்வர் ஜெயலலிதா கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய திமுக உறுப்பினர்

வெள்ளி, ஆகஸ்ட் 12,2016, மெட்ரோ ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன் என்பது தொடர்பான முதல்வரின் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா திணறி நின்றார்.முதல்வரும், பேரவைத் தலைவரும் தொடர்ந்து அந்தக் கேள்வியையே எழுப்பினாலும், அதற்கு டி.ஆர்.பி.ராஜா பதில் அளிக்கவில்லை. தமிழக சட்டசபையில் தொழில்துறை மற்றும் சிறு குறு தொழில்கள் குறித்த மானியக்கோரிக்கை விவாதத்தில் தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது., உறுப்பினர் பேசுகின்றபோது,

முதலீட்டுக்கு உகந்த சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

முதலீட்டுக்கு உகந்த சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

வெள்ளி, ஆகஸ்ட் 12,2016, சென்னை:சட்டசபையில் தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா பேசினார். அப்போது அவர், தொழில்துறை குறித்து சில கேள்விகளை அவர் எழுப்பினார். இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:– ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2016 வரையிலான காலக்கட்டத்தில் கூடுதலாக ஈர்க்கப்பட்ட அன்னிய முதலீடு ரூ.85,523 கோடி. மே 2011 மார்ச் 2016 வரையிலான காலக்கட்டத்தில் அன்னிய நேரடி

பவானிசாகர் அணையிலிருந்து, நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு ; 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

பவானிசாகர் அணையிலிருந்து, நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு ; 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 11, 2016, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பழைய ஆயக்கட்டு நிலங்களின் பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மொத்தம் 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பழைய ஆயக்கட்டு நிலங்கள்