சிறந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்கப்படும் : அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ அறிவிப்பு

சிறந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்கப்படும் : அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ அறிவிப்பு

ஜூலை 6 ,2017 ,வியாழக்கிழமை , சென்னை : காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், சிறந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ப‌‌ள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை வரும் 15 ஆ‌ம் ‌தேதி காமராஜரின் பிறந்‌தநா‌ள் வருவதாகவும், அவ‌ரை கவுரவிக்கும் ‌வகையில் பள்ளி பாடத்திட்டத்தில் அவரது வாழ்க்கை வர‌லாற்றை சேர்க்‌‌க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

ரே‌ஷனில் மக்கள் விரும்பாத பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் காமராஜ்

ரே‌ஷனில் மக்கள் விரும்பாத பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் காமராஜ்

ஜூலை 6 ,2017 ,வியாழக்கிழமை , சென்னை : ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது மக்கள் விரும்பாத சில பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்கும்படி ஊழியர்கள் கூறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். சட்டசபையில் நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை முழுமையாக வினியோகம் செய்ய வேண்டும் என்ற கவன ஈர்ப்பு தீர்மானம் தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்டது. அப்போது உறுப்பினர் செங்குட்டுவன் (தி.மு.க.) கூறும்போது, ‘கடந்த சில

மண்பாண்ட தொழிலாளர்களின் மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மண்பாண்ட தொழிலாளர்களின் மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,6 ,2017 ,வியாழக்கிழமை , சென்னை : மண்பாண்ட தொழிலாளர்களின் மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நேற்று சட்டசபையில் 110–விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:– மழைக்காலங்களில் மண்பாண்டங்கள் செய்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, ஜெயலலிதா சட்டமன்ற பொது தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 4,000 ரூபாய் மழைக் கால பராமரிப்பு உதவித் தொகை 5,000

தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கூடாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கூடாது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஜூலை ,6 ,2017 ,வியாழக்கிழமை , சென்னை : தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மேகதாது அணை திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் உமாபாரதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- மேகதாது பல் நோக்கு திடடத்தின் (குடிநீர் மற்றும் மின்சாரம்) தொழில்நுட்ப அனுமதிக்காக கர்நாடக அரசு மத்திய நீர்பாசன குழுவை தொடர்பு கொண்டுள்ளதாக மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவு

ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ஜூலை, 5 , 2017 ,புதன்கிழமை, சென்னை : 197 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15.7.2014 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்த அறிக்கையில், 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தினால்

ரூ.6 கோடியே 94 லட்சம் மதிப்பில் 4 புதிய பாலங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ரூ.6 கோடியே 94 லட்சம் மதிப்பில் 4 புதிய பாலங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ஜூலை, 5 , 2017 ,புதன்கிழமை, சென்னை : 6 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார வசதிகள், சாலை வசதிகள், பாலங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், ஊரகப் பகுதி