விவசாயிகள் குறைபாடுகளை களைய நேரடி மின்னணு நெல் கொள்முதல் நிலையம் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

விவசாயிகள் குறைபாடுகளை களைய நேரடி மின்னணு நெல் கொள்முதல் நிலையம் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, ஆகஸ்ட் 06,2016, சென்னை:விவசாயிகளிடம்  நெல்கொள்முதல் செய்வதில் காலதாமதத்தை தவிர்க்க நெல் கொள்முதல் நிலையங்களில் மின்னணு கொள்முதல் திட்டம் அமுல் படுத்தப்படும் என்றும் விவசாயிகளுக்கான பணம், வங்கி கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ்  பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு., அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளித்திடும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களை எனது தலைமையிலான

மதுவிலக்கு அமுலில் இருந்த போது,அதை ரத்து செய்து உத்தரவிட்டதே கருணாநிதிதான் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

மதுவிலக்கு அமுலில் இருந்த போது,அதை ரத்து செய்து உத்தரவிட்டதே கருணாநிதிதான் : சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

வெள்ளி, ஆகஸ்ட் 05,2016, சென்னை : பூரண மதுவிலக்கு அமுலில் இருந்த தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்து உத்தரவிட்டதே கருணாநிதிதான் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரப்படும். மதுவிலக்கு கொண்டு வருவதில் உண்மையான அக்கறை கொண்ட அரசு எனது அரசு தான் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் கூறினார். சட்டசபையில் மின் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மீது நேற்று முன்தினம் நடந்த விவாதத்திற்கு நேற்று அத்துறை

ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதா – ‘பசி’ நாராயணன் குடும்பத்தினர்

ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய முதல்வர் ஜெயலலிதா –  ‘பசி’ நாராயணன் குடும்பத்தினர்

வியாழன் , ஆகஸ்ட் 04,2016, எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல திரைப்பட நடிகர் மறைந்த ‘பசி’ நாராயணன். அவரது மறைவுக்குப் பிறகு குடும்பத்தினர் எவ்வித வருமானமும் இன்றி வறுமையான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்ற செய்தியை ஊடகங்கள் வழியாக அறிந்த முதல்வர் ஜெயலலிதா, ‘பசி’ நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ‘பசி’ நாராயணனின்

மின்துறையில் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அனைத்து தவறுகளையும் சரி செய்து தமிழகம் மின்மிகை மாநிலமாக ஒளிருகிறது : முதல்வர் ஜெயலலிதா

மின்துறையில் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அனைத்து தவறுகளையும் சரி செய்து தமிழகம் மின்மிகை மாநிலமாக ஒளிருகிறது : முதல்வர் ஜெயலலிதா

வியாழன் , ஆகஸ்ட் 04,2016, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உயர்ந்துள்ளதை மத்திய அரசே திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.மேலும், தி.மு.க. ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட மின்சாரத்துறையை சரி செய்தது தமது தலைமையிலான அ.தி.மு.க.அரசு என முதலமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். சட்டசபையில் நேற்று  எரிசக்தி, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் ரங்கநாதன் பேசினார். அவர் பேசும்போது, மின் துறையில் தமிழகம் உபரி மின்

தொற்று நோய்களின் பாதிப்பில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா : சட்டப்பேரவையில் விஜயபாஸ்கர் பேச்சு நேற்று

தொற்று நோய்களின் பாதிப்பில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியவர் முதல்வர் ஜெயலலிதா : சட்டப்பேரவையில் விஜயபாஸ்கர் பேச்சு நேற்று

புதன், ஆகஸ்ட் 03,2016, சென்னை:தமிழ்நாட்டுமக்களை டெங்கு தொற்று நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக காப்பாற்றியவர் முதல்வர் ஜெயலலிதாதான் என்று சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் டெங்கு நோய் கட்டுப்படுத்துவது குறித்து திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்  பதிலளித்து பேசினார். அப்போது அவர் அளித்த பதில் வருமாறு:- பொதுவாக பருவகாலங்களில் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் தொற்று நோய்களின் தாக்கம்பெரும் சவாலாக உள்ளது. உலகத்திலே

சவூதியில் காயமடைந்த தாட்சாயிணிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்கினார்

சவூதியில் காயமடைந்த தாட்சாயிணிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்கினார்

புதன், ஆகஸ்ட் 03,2016, சவூதி அரேபியாவில் காயமடைந்த தாட்சாயிணிக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான ஆவணத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கினார்.  இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் தாட்சாயிணி. சவூதி அரேபியாவில் பணிக்குச் சென்ற அவர், அங்கு ஏற்பட்ட கொடுமையில் இருந்து தப்பிக்க வீட்டு பால்கனியில் இருந்து குதித்தார். இதனால், முதுகு தண்டுவடத்தில் பலத்த காயமடைந்து சவூதி அரேபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தன்னார்வத்